காவிரி பிரச்சனையில் துரோகம்: பா.ஜ.க. மீது ஜெ. முதல் முறையாக கடும் தாக்கு!
கரூர்: லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பாரதிய ஜனதா கட்சியை முதல்வர் ஜெயலலிதா முதல் முறையாக மிகக் கடுமையாக தாக்கிப் பேசியிருக்கிறார். காவிரி நதிநீர் பிரச்சனையில் தொடர்ந்து துரோகம் செய்யும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்.. தமிழகத்தில் காங்கிரஸ், பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்கச் செய்யக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
கரூர் லோக்சபா தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரத்தில் பேசியதாவது:

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதிய ஜனதாவுக்கும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் எந்த காலத்திலும் காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதா கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாது.
கர்நாடகாவில் உள்ள காங்கிரசும், பாரதிய ஜனதாவும் காவிரி பிரச்னையில் ஒரே மாதிரியாக செயல்படுகின்றன. முந்தைய பாரதிய ஜனதா அரசு நாட்டின் பிரதமரை தலைவராகக் கொண்ட காவிரி நதிநீர் அமைப்பை ஏற்படுத்தியது.
ஆனால் பாரதிய ஜனதா அரசால் தமிழகத்துக்கு எந்த ஒரு நீதியும் கிடைக்காது என்பதால் அதற்கான ஆதரவை வாபஸ் பெற்றோம். வரும் தேர்தலில் காவிரி பிரச்சனையில் தொடர்ந்து துரோகம் செய்து வரும் காங்கிரஸ் கட்சிக்கோ, பாரதிய ஜனதாவுக்கோ வாக்களிக்கக் கூடாது. இந்த கட்சிகளுக்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது.
காவிரி பிரச்னை குறித்து பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிட்டிருந்தால் கர்நாடகாவில் அந்த கட்சி ஒரு தொகுதியை கூட பெற முடியாது.
காவிரி பிரச்னையில் நம்மை ஏமாற்றியது தான் கடந்த கால வரலாறு, அனுபவம். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளால் காவிரி தண்ணீரை பெற முடியாது. அது அவர்களுக்கும் தெரியும். ஆனால் காவிரி நீர் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை என நினைத்து அவர்கள் துரோகம் செய்கின்றனர். அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
-
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications