திமுக கழற்றிவிட்டால் தினகரனுடன் கூட்டணி... காங்கிரஸ் 'மாஸ்டர்' பிளான்
தினகரனுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் திட்டமிடுகிறதாம்.
Recommended Video

சென்னை: லோக்சபா, சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொள்ள வேண்டும்; இல்லையெனில் தினகரனுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது காங்கிரஸ் போடும் கணக்கு.
திமுக- காங்கிரஸ் கூட்டணியை உடைப்பதில் முனைப்பாக இருக்கிறது பாஜக. இதற்கேற்ப திமுகவும் காங்கிரஸை கழற்றிவிட முடிவு செய்திருக்கிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் வேறு ஒரு கணக்குப் போட்டுவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வலிமையான கூட்டணி அமைந்தால் திமுக வெல்லும்; அப்படி திமுக வென்றால் எப்படியாவது ஆட்சியில் பங்கேற்றுவிட வேண்டும்; அதற்கேற்ப நெருக்கடி கொடுக்க வேண்டும். ஏனெனில் இந்த வாய்ப்பை விட்டால் இனி தமிழகத்தில் ஒருநாளும் அதிகாரம் கிடைக்காது என நினைக்கிறது காங்கிரஸ்.
இதேவாதத்தைத்தான் டெல்லி மேலிடத்தில் சிதம்பரம், திருநாவுக்கரசர் போன்றோர் முன்வைக்கின்றனர். ராகுல் காந்தியும் திமுகவுடன் இதே அணுகுமுறையை பின்பற்றலாம் என நம்பிக் கொண்டிருக்கிறார்.
பாஜக நெருக்கடியால் திமுக தங்களை கழற்றிவிடலாம் என்பதையும் காங்கிரஸ் உணர்ந்திருக்கிறதாம். அப்படி திமுக ஒரு முடிவெடுத்தால் இயல்பாகவே தினகரனுடன் கூட்டணி அமைத்து விடலாம்; தினகரன் தலைமையில் மெகா கூட்டணி அமைந்தால் திமுகவை வீழ்த்த முடியும்; ஆட்சியில் பங்கேற்க முடியும் என்பதும் காங்கிரஸின் மற்றொரு கணக்கு.
ஏற்கனவே தினகரனுக்கு ஆதரவாகத்தான் தமிழக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இதுவே அந்த கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தினகரனுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால் சில எம்.எல்.ஏகள் முதல்வர் எடப்பாடியார் தலைமையில் அதிமுகவுக்கு எஸ்கேப் ஆகவும் வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications