விருதுநகரில் கோஷ்டி பூசலில் நனைந்த குஷ்பு… போட்டி போட்டு வரவேற்பு
விருதுநகர்: கோஷ்டி பூசலையும் காங்கிரஸ் கட்சியையும் பிரிக்கவே முடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு விருதுநகரில் குஷ்பு பங்கேற்கும் முதல் கூட்டத்தில் இது மீண்டும் அரங்கேறியுள்ளது.
காங்கிரஸ்கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கர்மவீரர் காமராஜர் பிறந்த ஊரான விருதுநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று மாலை பாரதியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியில் குஷ்பூ இணைந்த பிறகு முதன்முதலாக விருதுநகரில் நடைபெறும் கூட்டத்தில்தான் அவர் பங்கேற்கிறார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி.மாணிக்கம் தாகூர் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
நடிகை குஷ்பூ பங்கேற்கும் பொதுக்கூட்டம் என்பதால் காங்கிரஸ் கட்சியினர் தடபுடலாக வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அந்த வரவேற்பில் காங்கிரஸ் கட்சியினர் தங்களது கோஷ்டி பூசலை அரங்கேற்றினர்.
விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் ஒரு கோஷ்டி, முன்னாள் மாவட்ட தலைவர் சிவகாசி கணேசன் ஒரு கோஷ்டி, சிவகாசி அரசன் நிறுவனத்தின் தொழிலதிபர் விஜயக்குமார் தலைமையில் ஒரு கோஷ்டி என்று ஏகப்பட்ட கோஷ்டிகள் இயங்கி வருகின்றன.
மேலும், பொதுக்கூட்டத்திற்கு வரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், குஷ்பூ ஆகியோரை வரவேற்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் கணேசன் தலைமையிலான கோஷ்டியினர் நாளிதழ்களிலும், சுவர்களிலும் விளம்பரங்களையும் செய்தனர்.
அதில் முன்னாள் எம்.பி.யான மாணிக்கம் தாகூர் பெயர் இல்லை. அதேபோல், விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவரான வேலாயுதம் பெயரும் இல்லை. ஏனென்றால் வேலாயுதம் முன்னாள் எம்.பி., மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர்.
அதுபோல் மாணிக்கம் தாகூர் தரப்பில் அளிக்கப்பட்ட விளம்பரத்தில், காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் பெயரும், நடிகை குஷ்பூ பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் பெயர்கள் அதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications