For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக, தேமுதிகவைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் நாளை முதல் வேட்பாளர் நேர்காணல்

Google Oneindia Tamil News

சென்னை: வருகிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நாலை முதல் நேர்காணல் நடைபெறுகிறது என அக் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பணிகளில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்தவகையில், விருப்பமனுத் தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் செய்யும் பணியை திமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் நேற்று முதல் தொடங்கியது.

congress is all set to begin its candidate interview from tomorrow

இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனுத் தாக்கல் செய்தவர்களிடம் நாளை முதல் நேர்காணல் நடத்தப்படுகிறது என அக்கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

விருப்ப மனுக் கொடுத்தவர்களிடம் காங்கிரஸ் சார்பில் நேர்காணல் நடத்துபவர்கள் விவரம் பின்வருமாறு:

1. சென்னை - திருமதி D.யசோதா
2. திருவாரூர் - டாக்டர் இந்திரா காந்தி
3. காஞ்சிபுரம் - கீழானூர் ராஜேந்திரன்
4. வேலூர் - எஸ்.சம்பத், திரு.ஜெ.பிராங்களின் பிரகாஷ்
5. கிருஷ்ணகிரி - பலராமன்
6. தர்மபுரி - .பலராமன்
7. திருவண்ணாமலை - டாக்டர் கே.ஐ.மணிரத்தினம்
8. விழுப்புரம் - ஜி.கணேசன், திரு.ஜெ.அஸ்லம் பாஷா
9. சேலம் - சுதா ராமகிருஷ்ணன்
10. நாமக்கல் - கே.எம்.பாலசுப்பிரமணியம்
11. ஈரோடு - என்.நஞ்சப்பன்
12. நீலகிரி - தாரா ஷபி
13. கோயம்புத்தூர் - எல்.முத்துக்குமார்.
14. திருப்பூர் - இமயா கக்கன், திரு.எஸ்.தாஸ் பாண்டியன்
15. திண்டுக்கல் - .எஸ்.டி.நெடுஞ்செழியன்
16. கரூர் - .பி.என்.நல்லுசாமி
17. திரு;சசிராப்பள்ளி - ராணி வெங்கடேஷன்
18. பெரம்பலூர் - .கே.சிரஞ்சீவி
19. அரியலூர் - .எர்ணஸ்ட் பால்
20. கடலூர் - டி.செல்வம்
21. நாகப்பட்டிணம் - எஸ்.ராஜா தம்பி
22. திருவாரூர் - எ.வைரக்கண்ணு
23. தஞ்சாவூர் - . எஸ்.எம்.இதாயத்துல்லா
24. புதுக்கோட்டை - அமெரிக்கை வி.நாராயணன்
25. சிவகங்கை - சி.டி.மெய்யப்பன்
26. மதுரை - கு.செல்வப்பெருந்தகை
27. தேனி - .மயூரா ஜெயக்குமார்
28. விருதுநகர் - .பி.வேல்துறை
29. ராமநாதபுரம் - ஜே.ஜி.பிரின்ஸ்
30. தூத்துக்குடி - .ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன்
31. திருநெல்வேலி - டாக்டர் நிர்மலா அருள்பிரகாஷ்
32. கன்னியாகுமரி - .ராஜலிங்க ராஜா.

மேற்கண்டவர்கள் நேர்காணலை முடித்து மாநில தலைமைக்கு பட்டியலை அனுப்பி வைப்பார்கள். அதன் பின்னர் மாநில தலைமை டெல்லிக்கு பட்டியலை அனுப்பி வைக்கும். இதையடுத்து போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியலை டெல்லி தலைமை அறிவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

English summary
congress is all set to begin its candidate interview from tomorrow for Tamilnadu assembly election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X