கருணாநிதியை எதிர்த்து அதிகம் மோதிய கட்சி எது தெரியுமா?
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து அதிக வேட்பாளர்களை நிறுத்திய "பெருமை" காங்கிரஸ் வசம் உள்ளது. அதற்கு அடுத்த இடம்தான் அதிமுகவுக்குக் கிடைத்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி 14வது முறையாக சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கவுள்ளார். இதுவரை தோல்வியையே சந்தித்திராத கருணாநிதிக்கு 14வது தேர்தலும் வெற்றியாகவே முடியும் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
என்னதான் திமுகவின் பரம வைரி அதிமுக என்றாலும் கூட பலமுறை தோழமைக் கட்சியாக இருந்துள்ள, தற்போதும் கூட்டணிக் கட்சியாக இருக்கக் கூடிய காங்கிரஸ்தான் கருணாநிதிக்கு எதிராக அதிக வேட்பாளர்களை நிறுத்திய கட்சியாக இருக்கிறது என்பது சுவாரஸ்யமானது.

6 முறை மோதல்
கருணாநிதிக்கு எதிராக 6 முறை வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது காங்கிரஸ். ஆறு முறையும் அவரே வென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியால் 2வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

நம்பர் 2 அதிமுக
அதிமுக இந்த வரிசையில் 2வது இடத்தில்தான் வருகிறது. அக்கட்சி, கருணாநிதிக்கு எதிராக இதற்கு முன்பு 4 முறை வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது அதிமுக. இப்போது 5வது முறையாக வேட்பாளரை (பன்னீர் செல்வம்) அறிவித்துள்ளது.

2 முறை முஸ்லீம் வேட்பாளர்கள் மோதல்
2 முறை முஸ்லீம் வேட்பாளர்கள் கருணாநிதிக்கு எதிராக மோதி 2ம் இடத்தைப் பிடித்தனர். 1989ம் ஆண்டு முஸ்லீம் லீக் கட்சியும், 2006ம் ஆண்டு தாவூத் மியா கானும் கருணாநிதியை எதிர்த்து மோதி 2வது இடத்தைப் பிடித்தனர்.

கருணாநிதியுடன் மோதிய காங்கிரஸ்காரர்கள்
கே.ஏ. தர்மலிங்கம் (குளித்தலை), பரிசுத்த நாடார் (தஞ்சாவூர்), எஸ்.ஜி. விநாயகமூர்த்தி (சைதாப்பேட்டை), ராமலிங்கம் (சைதாப்பேட்டை), நெல்லை கண்ணன் (சேப்பாக்கம்), தாமோதரன் (சேப்பாக்கம்).

கருணாநிதியுடன் மோதிய அதிமுகவினர்
ஜி.கிருஷ்ணமூர்த்தி (அண்ணா நகர்), எச்.வி.ஹண்டே (அதிமுக), கே.சுப்பு (அதிமுக), ராஜேந்திரன் (திருவாரூர்), (2016 தேர்தலில்) பன்னீர் செல்வம் (திருவாரூர்).

முஸ்லீம் வேட்பாளர்கள்
வஹாப் (துறைமுகம்), தாவூத் மியா கான் (சுயேச்சை -சேப்பாக்கம்).
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications