For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாமானியர்களுக்கான பட்ஜெட் பற்றி பேச காங்கிரஸுக்கு தகுதியில்லை.. வரிந்துக்கட்டும் தமிழிசை

சாமானியர்களின் பட்ஜெட்டாக விளங்கும் மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சனம் செய்ய காங்கிரஸுக்கு தகுதியில்லை என தமிழிசை தெரிவித்துள்ளார்

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

Recommended Video

    பட்ஜெட் 2018-19, வரிந்துக்கட்டும் தமிழிசை- வீடியோ

    சென்னை: 70 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து நாட்டிற்காக எதுவும் செய்யாத காங்கிரஸுக்கு, சாமானியர்களின் பட்ஜெட்டாக விளங்கும் மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சனம் செய்ய தகுதியில்லை என தமிழிசை தெரிவித்துள்ளார்

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய பட்ஜெட் குறித்து பல கட்சி தலைவர்கள் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சிப்பதாக கூறினார். மேலும் பேசிய அவர் 70 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் நாட்டிற்கு என்று எதுவுமே செய்யாத நிலையில், ஒரு முன்னேற்றம் கூட அவர்கள் ஆட்சி காலத்தில் ஏற்பட்டதில்லை என்றும் அவர் கூறினார்.

     Congress is unfit to speak about Budget

    இத்தகைய காங்கிரஸ் தற்போது மத்திய அரசின் பட்ஜெட் குறை கூறுவது வேடிக்கையாக இருப்பதாகவும், சாமானியர்கள் பட்ஜெட்டான இதனை பற்றி விமர்சனம் செய்ய காங்கிரஸுக்கு தகுதியில்லை என்றும் கூறினார். மேலும் பேசிய அவர் தமிழகத்திற்கு ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் பூங்கா அமைக்கப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாகவும் இது மிகப்பெரிய சாதனை என்றும் அவர் கூறினார்.

    முன்னதாக பட்ஜெட் குறித்த விமர்சிப்பவர்கள் குறித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்த தமிழிசை, பாமாலையான பட்ஜெட்டை பலரும் காமாலை கண்ணுடன் பார்ப்பதாகவும், மோடி மீதான வெறுப்புகண்ணாடியை கழட்டி விட்டு பார்த்தால் இந்த பட்ஜெட்டின் மகத்துவம் புரியும் என்று வழக்கம் போல தமிழில் பூந்து விளையாடி இருந்தார்.

    English summary
    Congress is unfit to speak about Budget 2018 says Tamilisai. And also she added that for past 70 years Congress ruled the country without any Improvement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X