தமிழர் உணர்வை கிண்டல் செய்ய நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்பு துறை ஒதுக்கீடு- விஜயதாரணி சாடல்
தமிழர் உணர்வை கிண்டல் செய்யும் வகையில் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி சாடியுள்ளார்.
சென்னை: தமிழர்கள் உணர்வை கிண்டல் செய்யவே நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி சாடியுள்ளார்.
மத்திய அமைச்சரவை மாற்றத்தில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் கேபிடன் அமைச்சரானார். அத்துடன் வருக்கு நாட்டின் பாதுகாப்புத் துறை கொடுக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு முழுநேரமாக பெண் ஒருவர் அமைச்சராக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் பிரதமர் பொறுப்புடன் இந்திரா காந்தி பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்தார்.

காங்கிரஸ் விமர்சனம்
பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக சட்டசபை காங்கிரஸ் கொறடா விஜயதாரணி கூறியதாவது:

அனிதா சட்டம்
நீட்தேர்வு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, தமிழக அரசு அனிதா சட்டம் கொண்டுவர வேண்டும்.

கிண்டல் செய்வது போல..
அனிதா உயிரிழந்த நிலையில், நிர்மலா சீதாராமனுக்கு பதவி அளித்தது தமிழகமக்களின் உணர்வை கிண்டல் செய்வதுபோல் உள்ளது. இவ்வாறு விஜயதாரணி கூறியுள்ளார்.

நிர்மலா சீதாராமனுக்கு எதிர்ப்பு ஏன்?
நீட் தேர்வில் தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும் என நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் பல்டி அடித்தது. இதனால் அரியலூர் மாணவி அனிதா தூக்கிட்டு மாண்டு போனார். தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோபமும் நிர்மலா சீதாராமன் மீது இருக்கிறது. இந்த நிலையில் அவருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டிருப்பதும் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications