8 வழி சாலைக்கு பதில் எடப்பாடியார் வேண்டுமானால் இதை செய்யலாமே... தங்க தமிழ்செல்வன் யோசனை!
காங்கிரஸ் அமமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்: தங்கதமிழ்செல்வன் பேட்டி
Recommended Video

திருவாரூர்: அரசியல் பரபரப்புக்கு என்றுமே பஞ்சம் இல்லாத வகையில் பேசிவரும் தங்க.தமிழ்ச்செல்வன் தற்போதும் ஒரு செய்தியை அளித்துள்ளார். அத்துடன் முதலமைச்சருக்கு ஒரு யோசனையையும் கூறியுள்ளார்.
அமமுக-வின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன். 18 எம்.எல்.ஏ. விவகாரத்துக்கு பின்னர் அரசியல் களத்தில் சூடு பறக்க கருத்துக்களையும், சில நேரங்களையும் தூக்கி வாரிப்போடும் தகவல்களையும் அறிவித்து வருகிறார்.

தங்க.தமிழ்ச்செல்வன் பேட்டி
மன்னார்குடியில் நலத்திட்ட விழா ஒன்று அமமுக சார்பில் நடைபெற்றது. அதில் தங்க.தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டார். கூடவே பல்வேறு விழாக்களிலும் மன்னார்குடியில் அவர் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சிகளின்போது செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்ச்செல்வன் பேசியவற்றிலிருந்து:

சரியா, தவறா?
"18 எம்எல்ஏக்களின் வழக்கின் தீர்ப்பு தீர்ப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சட்டசபை சபாநாயகர் சார்பில் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டுள்ளதால் விசாரணை தாமதமாகியுள்ளது. எப்படி இருந்தாலும் இந்த 18 பேரின் பதவி நீக்கம் சரியா, தவறா என்பதை விரைவில் அறிக்க வேண்டும்.

காங்கிரசுடன் கூட்டணி
தகுதி நீக்கம் சரி என்றால், 18 தொகுதிகளிலும் உடனடியாக தேர்தலை நடத்தியே ஆக வேண்டும். ஏனெனில் அமமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க வேண்டும் என நாங்கள் மட்டுமல்ல, கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என எல்லோருமே விரும்புகின்றனர். அதனால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேறி, எங்களை அணுக வேண்டும். அப்படி எங்களை அணுகினால் அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து கொள்ள தயாராக இருக்கிறோம்.

வேறு உதவி செய்யலாம்
8 வழி சாலை தேவையில்லாத ஒன்று. இந்த சாலை போடுவதை விட்டுவிட்டு உளுந்தூர்பேட்டை சாலையை மேம்படுத்தலாம். இல்லையென்றால் சேலம் மாவட்டத்துக்கு முதலமைச்சர் வேறு ஏதாவது உதவி செய்யலாம். உதாரணத்துக்கு அங்கு மருத்துவ கல்லூரியோ, வேளாண் கல்லூரியோ அமைக்கும் முயற்சியில் அவர் ஈடுபடலாம்" என்று தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications