சீக்கிரமே தமிழக காங்கிரஸுக்குப் புது 'தல'...திருநாவுக்கரசரா..?
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனின் பதவி நாட்கள் எண்ணப்படுகின்றன. விரைவில் புதிய தலைவரை நியமிக்க கட்சி மேலிடம் தீர்மானித்துள்ளதாம்.
இந்த நியமனம் தேர்தல் முடிவுக்குப் பின்னர் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. புதிய தலைவர் யார் என்பது தெரியவில்லை. ஆனால் கட்சியை சிறப்பான முறையில் வழி நடத்திச் செல்லக் கூடியவராக நியமிக்கப் போகிறார்களாம்.
தற்போது தமிழக காங்கிரஸ் தலைமை, நிர்வாகம் மீது கட்சித் தலைமை செம காட்டமாக உள்ளதாம். எனவேதான் தலைவரை மாற்றத் திட்டமிட்டுள்ளதாம்.

திராட்டில் விடப்பட்ட அவலம்
தமிழகத்தில் ஆட்சியை இழந்த பின்னர் காங்கிரஸ் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்தே லோக்சபா தேர்தல்களை சந்தித்து வந்துள்ளது. ஆனால் தற்போது முதல் முறையாக தனித்து விடப்பட்டது. இதற்குத் தமிழகத் தலைவர்களின் டிப்ளமஸி சரியில்லை என்று கட்சித் தலைமை கருதுகிறதாம்.

போட்டியிடத் தயங்கிய தலைவர்களால் எரிச்சல்
அதேபோல ஜி.கே.வாசன், ப.சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடத் தயங்கியதும், மறுத்தது, வாரிசுகளுக்கு மட்டும் சீட் கேட்டதும் கூட தலைமையை கடுப்பாக்கியுள்ளதாம்.

அடிமட்டத்திலிருந்து அயர்ன் பண்ணப் போறாங்களாம்
கட்சியின் அடிமட்டத்திலிருந்து தலைமை வரை புதியவர்களைப் போட்டு கட்சிக்குப் புத்துயிர் ஊட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

அடுத்த தலைவர் யார்...
அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பாக இப்போது கிசுகிசுப்பான பேச்சுக்கள் களை கட்டியுள்ளன.

திருநாவுக்கரசரா..
முன்னாள் மத்திய அமைச்சரும், கிளீன் தலைவர் என்று பெயரெடுத்தவருமான எஸ்.திருநாவுக்கரசரின் பெயர் தலைவர் பதவிக்கு அடிபடுகிறது.

நாச்சியப்பன்- இளங்கோவன்
அதேபோல சுதர்சன நாச்சியப்பன் மற்றும் முன்னாள் தலைவர் இளங்கோவன் ஆகியோரும் தலைவர் பதவிக்கு பேசப்படுகிறார்கள்.

இளங்கோவனுக்கு வாய்ப்பு அதிகம்
ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைவராக இருந்தபோது கட்சியை அதிரடியாக நடத்தினார். இவரது பதவிக்காலத்தின்போதுதான் வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. அதன் பின்னர் இளங்கோவனைத் தூக்கி விட்டு வாசனைத் தலைவராக்கியது காங்கிரஸ் தலைமை.

நிர்வாகத் திறமை திருநா.வுக்கு அதிகம்
அதேசமயம், நிதானமானவர், மென்மையானவர், உறுதியானவர், அனுசரித்துப் போகக் கூடியவர், திறமை மிக்கவர் என்ற வகையில் திருநாவுக்கரசருக்கும் நல்ல பெயர் உள்ளது. அவருக்கான வாய்ப்பும் அதிகமாகவே உள்ளதாம்.

ராகுல் ஆதரவு
மேலும் திருநாவுக்கரசருக்கு ராகுல் காந்தியின் ஆதரவும் உள்ளதாக சொல்கிறார்கள். தமிழகத்தில் ராகுல் பிரசாரம் செய்தது திருநாவுக்கரசர் போட்டியிட்ட ராமநாதபுரத்தில் மட்டும்தான் என்பது நினைவிருக்கலாம்.

வாசன் குரூப்புக்கு பெரிய ஆப்பு கன்பர்ம்ட்
அதேசமயம், இந்த முறை ஜி.கே.வாசன் தரப்பு மீது கட்சித் தலைமை கடும் கோபத்தில் உள்ளதால் அவர்கள் அனைவரும் வேரோடு பிடுங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

திருநா. வந்தால் என்ன லாபம்..
திருநாவுக்கரசருக்கு கிட்டத்தட்ட தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளிடமும் நல்ல பெயர் உள்ளது. திமுக, தேமுதிக என்று அனைவரிடமும் அன்பு பாராட்டக் கூடியவர் அவர். அவருக்கு எதிரான மாற்றுக் கட்சித் தலைவர்களே என்று கூறும் அளவுக்கு நல்ல அன்பும், மரியாதையும் உள்ளவர். எனவே அவரே அடுத்தத் தலைவராகக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications