ஜெ.வைச் சந்தித்த விஜயதாரணியை முதலில் கட்சியை விட்டு நீக்க வேண்டும்.. காங்கிரஸார்
சென்னை: அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருக்கும் விஜயதாரணி முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதை எப்படி ஏற்க முடியும். அவரை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த விஜயதாரணிக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் சரமாரியாக புகார்களை அள்ளி வீசியது. இந்த நிலையில் விஜயதாரணியின் பதவி பறிக்கப்பட்டது.
இதனால் கோபமடைந்த அவர் முதல்வர் ஜெயலலிதாவைப் போய்ப் பார்த்தார். மேலும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனையும் சந்தித்தார். இதனால் அவர் வேறு கட்சிக்குத் தாவப் போவதாக பரபரப்பு கிளம்பியது.
தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி விஜயதாரணி எம்.எல்.ஏ.வுக்கும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் பகிரங்கமாகவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினார்கள். போலீசிலும் மாறி மாறி புகார் செய்தார்கள்.

காங்கிரஸார் கொதிப்பு
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவையும், பாஜக தலைவரான பொன். ராதாகிருஷ்ணனையும் விஜயதாரணி சந்தித்து காங்கிரஸார் மத்தியில் கடுப்பைக் கிளப்பியுள்ளது.

அடுத்தடுத்து அவமானப்படுத்துகிறார்
இதுகுறித்து காங்கிரஸார் கூறுகையில், பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்பு விஜயதாரணி செய்தியாளர்களை சந்தித்து ராகுல்காந்தியின் முடிவு பற்றி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்
மேலும் இளங்கோவன் பெண்களை வெறுப்பவர் என்றும், தமிழக காங்கிரஸ் பெண்களுக்கு எதிரானது என்றும் அவதூறாகப் பேசி வருகிறார். அவரது பேச்சுக்களை மேலிடத்திற்கு அனுப்பியுள்ளோம்.

ஜெயலலிதாவை எப்படி சந்திக்கலாம்
அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் காங்கிரஸ் உள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை விஜயதாரணி சந்தித்துள்ளார். இதை ஏற்கவே முடியாது.

கட்சியை விட்டு நீக்க வேண்டும்
எனவே கட்சிக் கொள்கைளுக்கும், கட்சிக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையிலும் நடந்து வரும் அவரை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று காங்கிரஸார் கூறுகின்றனர்.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications