வேலூர் அருகே பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. ஒருவர் பலி.. 13 பேர் காயம்
வேலூர் மாவட்டத்தில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். .
வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே புதிதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளி ஒருவர் பலியாகினார். 13 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகில் உள்ள கோரந்தாங்கியில் புதிதாக பள்ளிக் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடத்தை கட்டும் பணியில் சுற்றுவட்டாரத்தில் இருந்து கட்டிடத் தொழிலாளர் பலர் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தக் கட்டிடம் திடீரென இன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இடிபாட்டில் சிக்கிக்கொண்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகியது. இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கோரந்தாங்கல் பகுதியில் நடைபெற்ற இந்தக் கட்டிட விபத்தில் சிக்கி பாக்கியராஜ் என்ற கட்டிட தொழிலாளி உயிரிழந்துள்ளார். 13 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications