அதிமுக வாக்குகளைத்தான் எங்கள் கூட்டணி சிதறடிக்கும்: திருமாவளவன்
சென்னை: திமுக வுக்கான இயல்பான வாக்கு வங்கியை நாங்கள் பிரிக்கவில்லை. அதிமுகவுக்கான வாக்குகளைத்தான் எங்கள் கூட்டணி சிதறடிக்கும். இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி என்று திருமாவளவன் கூறியுள்ளார். தனி நபர்களை முதல்வராக முன்னிறுத்தி னால் கொள்கை அடிபட்டுவிடும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக திருமாவளவனை அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சில வாரங்களுக்கு முன்பு கோரிக்கையை முன் வைத்தனர்.
அப்போது, முதல்வர் வேட் பாளர் என்பதை தேர்தலுக்கு முன்பாக அறிவிப்பதில்லை என்று மக்கள் நலக்கூட்டணி தலைவர் பேசி முடிவு செய்துவிட்டோம். எனவே, அதுபற்றி பேச வாய்ப்பில்லை என்று திருமாவளவன் கூறியிருந்தார்.
இந்த நிலையில், வெளியூர்களிலிருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பலர், ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 20 சதவீதம் வாக்கு வங்கி உள்ளது. இந்த வாக்கு வங்கியை மக்கள் நலக் கூட்டணியின் வசமாக்குவதற்கு உங்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் நன்றாக இருக்கும் என்று திருமாவளவனிடம் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

முதல்வர் வேட்பாளரா?
இது குறித்து கருத்து கூறியுள்ள திருமாவளவன், மக்கள் நலக் கூட்டணி என்பது ஐக்கிய முன்னணி. இதில் தனி நபரை முன்னிறுத்த முடியாது. பெரிய கட்சிகளில், அக்கட்சிகளை வழிநடத்தும் தலைவர்கள்தான் முதல்வர் என்பது அறிவிக்கப்படாத அறிவிப்பு. அவற்றுக்கு மாற்று என்று சொல்லும் மக்கள் நலக்கூட்டணி அப்படி செய்ய முடியாது என்றார்.

கொள்கை கூட்டணி
இந்த கூட்டணி தேர்தலுக்குப் பிறகும் செயல்படும். எனவே, மக்கள் நலக் கூட்டணியின் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி மட்டுமே தேர்தலை சந்திக்க வேண்டும். தனி நபரை முன்னிலைப்படுத்தினால் கொள்கை அடிபட்டு விடும் என்றும் கூறினார்.

அதிமுக உடன் போட்டி
மக்கள் நலக்கூட்டணி அதிமுகவிற்கு சாதகமான கூட்டணி என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில்
விடுதலைச் சிறுத்தைகள் சாராத தலித் வாக்காளர்களும் எங்களுக்கு வாக்களிக்கும் மனநிலையில் உள்ளனர் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

அதிமுக வாக்குகளை சிதறடிக்கும்
திமுக வுக்கான இயல்பான வாக்கு வங்கியை நாங்கள் பிரிக்கவில்லை. அதிமுகவுக்கான வாக்குகளைத்தான் எங்கள் கூட்டணி சிதறடிக்கும். இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி என்று கூறியுள்ளார்.

தேமுதிக உடன் கூட்டணி
தேமுதிகவுடன் பல முரண்பாடுகள் இருந்தாலும், ஊழல், மது என்னும் பிரதான பிரச்சினையில் அக்கட்சியுடன் உடன்படுகிறோம். தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தால் மேலும் வலிமையடைவோம் என்பதால் அக்கூட்டணியை விரும்புகிறோம். குடும்ப அரசியல், தனி மனித செயல்பாடுகள் போன்ற முரண்பாடுகளை முதன்மையாகக் கொள்ளவில்லை என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications