For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அது எப்படி அப்படி சொல்லலாம்.. ஆர்வக் கோளாறு டிவீட்.. வாங்கிக் கட்டிக் கொண்ட கிரண் பேடி

Google Oneindia Tamil News

புதுச்சேரி: கால்பந்து உலகக் கோப்பையை பிரான்ஸ் வென்றதைத் தொடர்ந்து புதுச்சேரி மக்கள் வெற்றி பெற்றதாக கூறி டிவீட் போட்டு புதுச்சேரி மக்களின் கோபத்தை சம்பாதித்துள்ளார் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி.

கிரண்பேடி புதுச்சேரிக்கு வந்தது முதலே சர்ச்சைகள்தான். இந்த நிலையில் புதிதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பி புதுச்சேரி மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் பேடி.

பிரான்ஸ் உலகக் கோப்பையை வென்றது தொடர்பாக அவர் போட்ட டிவீட்டில் புதுச்சேரி வெற்றி பெற்றதாக அவர் கூறியது புதுச்சேரி மக்களிடையே கோபத்தைக் கிளப்பியுள்ளது.

கொண்டாடிய புதுச்சேரி

கொண்டாடிய புதுச்சேரி

பிரான்ஸின் ஆதிக்கத்தின் கீழ் முன்பு இருந்த பகுதி என்பதால் புதுச்சேரிக்கும், பிரான்ஸுக்குமான உறவு எப்போதுமே சற்று நெருங்கியதாகவே இருக்கும். இதனால் நேற்று நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியை புதுச்சேரியிலும் மக்கள் ரசித்துப் பார்த்தனர். முதல்வர் நாராயணசாமியும் இதற்கு விதி விலக்கல்ல.

தெருக்கள் தோறும் கொண்டாட்டம்

தெருக்கள் தோறும் கொண்டாட்டம்

பிரான்ஸ் வெற்றியை புதுச்சேரி மக்களும் தெருத் தெருவாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஆட்டம் பாட்டம் களை கட்டியிருந்தது. இந்த நிலையில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி போட்ட டிவீட் சர்ச்சையைக் கிளப்பி விட்டது.

புதுச்சேரி வென்றதாக டிவீட்

கிரண் பேடி போட்ட டிவீட்டில், புதுச்சேரி மக்கள் (முன்னாள் பிரெஞ்சு பிராந்தியம்) உலகக் கோப்பையை வென்றுள்ளனர். வாழ்த்துகள் நண்பர்களே. விளையாட்டு அனைவரையும் ஒருங்கிணைக்கிறது என்று போட்டிருந்தார் கிரண் பேடி. இதுதான் சர்ச்சையைக் கிளப்பியது.

கிரண் பேடிக்குக் கண்டனம்

பேடியின் டிவீட்டுக்கு பலரும் வந்து கண்டனங்களைக் குவித்து விட்டனர். அது எப்படி புதுச்சேரி வென்றதாக கூறலாம். புதுச்சேரி இந்தியாவின் ஒரு பகுதி. பிரான்ஸுடன் சேர்த்து கிரண் பேடி பேசியது தவறு என்று பலரும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

இதுவா பெருமை பேடி

உங்களுக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா. பிரான்ஸ் வென்றால் எப்படி பெருமை கிடைக்கும். இந்தியா வென்றால்தானே பெருமை கிடைக்கும் என்று இவர் சாடியுள்ளார்.

உங்கள் அதிபரைப் பாருங்கள்

கிரண் பேடி உங்களது அதிபரைப் பாருங்கள் என்று இவர் கிண்டலடித்துள்ளார்.

எனக்கெல்லாம் பெருமை இல்லை

பிரான்ஸின் வெற்றியைக் கொண்டாட பல வழிகள் உள்ளன. நான் பிறவி புதுச்சேரிக்காரி. இதை நான் வென்தாக என்னால் உணர முடியவில்லை. பிரான்ஸ் வென்றுள்ளது, அவ்வளவுதான். இது ஒரு விளையாட்டு. இதை ஆதிக்க கால மனப்பான்மையுடன் ஒப்பிடுவது தேவையற்றது. கிரண் பேடி தனது டிவீட்டை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இவர்.

English summary
Puducherry Lt Governor Kiran Bedi has landed herself in a controversy by her Tweet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X