மழையால் அடிபட்டுப் போன கறிவாழை விற்பனை - புதுகை விவசாயிகள் அவதி
புதுகை: தொடர் மழையால் புதுக்கோட்டையில் கறி வாழை விற்பனை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. விற்பனையும் குறைந்துள்ளதால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழை விவசாயம் அதிகமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இயற்கை சீற்றங்களால் வாழைகள் அழிவுகள் ஏற்படுகிறது என்பதால் வாழையின் விவசாயத்தையும் குறைக்கத் தொடங்கினார்கள். ஆனாலும் கறி வாழை விவசாயம் ஆங்காங்கே இருந்து வருகிறது. எப்பவும் விலை குறைவு ஏற்படாது என்று கறிவாழைகள் விவசாயம் பெருமளவு இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேகம் மூட்டத்துடன் தூரல்கள் விழுந்தது. அதனால் அதிக அளவில் வாழைத் தார்கள் பழுக்கத் தொடங்கியது. மேலும் கறி வாழைகளும் அறுவடைக்கு தயாரானது.
எனினும், மழை தொடர்ந்ததால் கடந்த சில நாட்களாக கறிவாழைத் தார்கள் விற்பனை விலை குறைவானது. அதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கார்த்திகை மாதம் பிறந்தால் ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணியும் பக்தர்கள் காய்கறிகள் அதிகம் வாங்குவார்கள் என்ற நிலையில் கார்த்திகையின் முதல் நாளில் கறி வாழைத் தார்கள் கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது.












Click it and Unblock the Notifications