அந்தாளை கொல்லுடா காசி... தூண்டிவிட்ட கள்ளக் காதலி... சரமாரியாக வெட்டிய காதலன்
திருச்செந்தூர்: எனது கணவரைக் கொன்று விடு. அப்போதுதான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்று கள்ளக்காதலி கூறியதை ஏற்று அவரது கணவரைக் கொன்ற கள்ளக்காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர். உடந்தையாக இருந்ததாக அந்தப் பெண்ணையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருச்செந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தக் கொலை. கொல்லப்பட்ட நபரின் பெயர் முருகன். இவர் கூல் டிரிங்ஸ் கடை நடத்தி வந்தார். 44 வயதான இவர் நேற்று காலை பிணமாகக் கிடந்தார். அவரைக் கொலை செய்து போட்டிருந்தது தெரிய வந்தது.
முகம் கல்லால் அடித்து கொடூரமாக சிதைக்கப்பட்டிருந்தது. கை, கழுத்து பகுதிகள் சரமாரியாக வெட்டப்பட்டிருந்தன. போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் காசி என்பவர் சிக்கினார்.

யார் இந்த காசி?
ஐகோர்ட் ராஜா என்பவரின் மகன்தான் இந்த காசி. 19 வயதுதான் ஆகிறது. முருகன் கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த வயதிலேயே திருட்டு, வழிப்பறி என போக்கிரியாக திரிந்தவர். இந்த நிலையில் முருகன் மனைவி மீது காசி பார்வையின் திரும்பியது.

திருட்டுக் காதல்
காசி வீசிய வலையில் முருகனின் மனைவி விழுந்தார். இருவரும் தகாத உறவில் இறங்கினர். இது அரசல் புரசலாக முருகனுக்குத் தெரிய வந்தது. அவர் அதிர்ச்சி அடைந்தார். இருவரையும் கூப்பிட்டுக் கண்டித்தார். ஆனாலும் வழக்கம் போல கள்ளக்காதல் ஜோடி அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. உறவு தொடர்ந்தது.

கடும் ஆத்திரம்
இதனால் வெகுண்ட முருகன், காசியை வேலையை விட்டு நீக்கினார். இதனால் காசி அதிர்ச்சி அடைந்தார். முருகனின் மனைவியைப் பார்க்க முடியாமல் ஆத்திரமடைந்தார். அதே நிலையில்தான் முருகன் மனைவியும் இருந்தார்.

கொன்று விடு காசி
இந்த நிலையில் கடும் முயற்சிக்குப் பின்னர் காசியும், முருகனின் மனைவியும் ரகசியமாக சந்தித்தனர். அப்போது தனது கணவரை போட்டுத் தள்ளி விடுமாறு காசிக்கு கூறியுள்ளார் முருகன் மனைவி. அப்போதுதான் நாம் நிம்மதியாக வாழ முடியும் என்றும் கூறியுள்ளார். காசியும் அதே மன நிலையில்தான் இருந்துள்ளார்.

வெட்டித் தள்ளினர்
இதையடுத்து திட்டமிட்டு முருகனை திருச்செந்தூர் மையவாடி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று அங்கு வைத்து காசியும், அவரது நண்பர் ஒருவரும் சேர்ந்து முருகனை சரமாரியாக வெட்டித் தள்ளினார்கள். பின்னர் கல்லாரலும் சரமாரியாக அடித்துக் கொன்றுள்ளனர். தற்போது முருகன் மனைவியும் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications