ஆட்டோ, குடிசைக்கு தீ வைத்த போலீஸ் 'கருப்பு ஆடு' அடையாளம் தெரிந்தது!
சென்னையில் நடைபெற்ற கலவரத்தின் போது ஆட்டோ மற்றும் குடிசைகளுக்கு தீ வைத்த போலீசாரை கமிஷனர் ஜார்ஜ் நேரில் அழைத்து விசாரித்தார். இதனால் காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: கடந்த 23ம் தேதி சென்னையில் நடைபெற்ற வன்முறையின் போது, குடிசை மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்த பெண் போலீசார் உள்பட 5 பேரை சென்னை கமிஷனர் ஜார்ஜ் நேரில் அழைத்து விசாரணை செய்தார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தன்னெழுச்சிப் போராட்டம் வெடித்தது. இரவும் பகலுமாக தொடர்ந்து ஒரு வாரம் மாணவிகள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என போராட்டத்தில் பங்கேற்று ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்கள்.
இதனையடுத்து, தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் அவசரச் சட்டத்தை இயற்றியது. ஆனால், தங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று கோரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தை கலைக்க போலீசார் இறக்கிவிடப்பட்டனர்.

தீ வைத்த போலீஸ்
ஒரு வாரம் அமைதியாக நடந்த போராட்டத்தில் போலீசார் இறங்கிய உடன் வன்முறையாக மாறியது. தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரையும் போலீசார் கொடூரமாக தாக்கினர். சென்னையில் நடைபெற்ற கலவரத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள நடுகுப்பம், மயிலாப்பூரில் உள்ள அம்பேத்கர் பாலம் உள்ளிட்ட இடங்களில் போலீசாரே வன்முறையில் இறங்கினார்கள்.

அமைதிப் போராட்டம்
ஒரு வாரம் அமைதியாக நடந்த போராட்டத்தில் போலீசார் இறங்கிய உடன் வன்முறையாக மாறியது. தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரையும் போலீசார் கொடூரமாக தாக்கினர். சென்னையில் நடைபெற்ற கலவரத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள நடுகுப்பம், மயிலாப்பூரில் உள்ள அம்பேத்கர் பாலம் உள்ளிட்ட இடங்களில் போலீசாரே வன்முறையில் இறங்கினார்கள்.

அதிர்ச்சி
இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், போலீசார் தீ வைத்ததாக வெளியான வீடியோ குறித்து சென்னை கமிஷனர் பி.சி.ஜார்ஜ் விசாரணை நடத்தினார். சம்பவம் நடைபெற்ற அன்று அம்பேத்கர் பாலம் பகுதியில் பணியில் இருந்த போலீசார், காவல்துறை அதிகாரிகளை அழைத்து அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

யார் அந்த பெண் போலீஸ்?
அடையாள அணிவகுப்பில் தி.நகர் காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் மகாலட்சுமி என்ற பெண் போலீஸ் ஆட்டோவுக்கு தீ வைத்ததாக அடையாளம் காணப்பட்டார். இவர் சில மாதங்களுக்கு முன்புதான் ஆயுதப்படை பிரிவில் இருந்து காவல் நிலைய பணிக்கு அனுப்பப்பட்டார். இந்த அணிவகுப்பில் தீ வைக்கப்பட்டது தொடர்பாக மேலும் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் போலீசார் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிக்கிய ஆண் போலீஸ்
தீ வைத்ததில் ஈடுபட்ட இரண்டு பெண் போலீசாரில் மற்றொருவர் அண்ணா நகர் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படையில் பணிபுரிபவர் என்றும், ஆண் காவலர் ஆயுதப் படை பிரிவைச் சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சஸ்பெண்ட்
இவர்கள் 5 பேரையும் நேரில் வரவழைத்த கமிஷனர் ஜார்ஜ், தனித்தனியே அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதனிடையே, தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பெண் போலீசாரும், 3 ஆண் போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications