வரத்து அதிகரிப்பு: மல்லி விலை கடும் வீழ்ச்சி - விவசாயிகள் வேதனை
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கொத்த மல்லி இலை வரத்து அதிகரித்துள்ளதையடுத்து அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் என்றாலே விவசாயம் நிறைந்த பகுதிகள் அதிகம் இயற்கை அளித்த கொடையாக இம்மாவட்டம் விளங்குகிறது. இம் மாவட்டத்தில் காய்கறிகளுக்கு பெயர் போன பகுதிகளாக பாவூர் சத்திரம், ஆலங்குளம், சாம்பவர் வடகரை, சுரண்டை, ஊத்துமலை ஆகிய பகுதிகளாகும்.

இங்கு விளையும் காய்கறிகள் நெல்லை மாவட்டம் மட்டுமல்லாது தமிழ் நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது போதிய மழை இல்லாத காரணத்தால் இந்த பகுதிகளில் காய்கறி விளைச்சல் குறைந்த அளவே உள்ளது.
தற்போது தென் மேற்கு பருவமழை காலம் என்பதால் "கொத்த மல்லி இலை" சாகுபடியை அதிக அளவில் பயிரிட்டுள்ளனர் இந்த பகுதி விவசாயிகள். இதனால் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த வாரம் கிலோ ரூ.60 முதல் 85 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது கிலோ ரூ.25 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மல்லி இலை வரத்து அதிகரித்த போதும் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு போதிய விலையில்லாமல் வேதனையடைந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications