குழந்தை இல்லாத ஏக்கத்தில் தவிப்பு.. ஒரே கயிற்றில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை - சென்னை அருகே சோகம்
சென்னை அருகே தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
Recommended Video

சென்னை: சென்னை அருகே கணவன், மனைவி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த புறநகர் பகுதியான நாவலூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார் 37. தனியார் ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி விஜயா 29. திருமணமாகி மூன்றரை வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி மனமுடைந்து காணப்பட்டனர்.
இந்தநிலையில், இவர்களது வீட்டின் கதவு நேற்று காலையில் இருந்து இரவு வரை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இரவு 8 மணிக்கு கதவை உடைத்து பார்க்கும் போது, கணவன், மனைவி ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடம் வந்த தாழம்பூர் போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசாதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications