செங்கோட்டை அருகே கார் மோதி பைக்கில் சென்ற கணவன், மனைவி பலி
செங்கோட்டை: செங்கோட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் கணவன், மனைவி பலியாகியுள்ளனர்.
செங்கோட்டை அருகே உள்ள புளியரை தெற்குமேடு, முப்புடாதியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மாரியப்பன். கூலித் தொழிலாளி. அவரது மனைவி கிருஷ்ணமாரி. மாரியப்பன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு "எஸ் வளைவில்" உள்ள மாமியாரை பார்க்க இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது கேரளாவில் இருந்து செங்கோட்டை நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மாரியப்பனின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கணவனும், மனைவியும் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பனும், அவரது மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் ஓட்டுனர் டேவிட் ராஜாவை தேடி வருகின்றனர். விபத்தில் கணவனும், மனைவியும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாரியப்பன், கிருஷ்ணமாரி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications