For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பூந்தமல்லி நண்பர்கள் கொலை வழக்கு – கொலையாளிகள் இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறை!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் சொந்த நண்பரையே கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றவாளி இரண்டு பேருக்கும் 5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கம், சிட்கோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் . இவருடைய நண்பர்கள் அம்பத்தூர், எம்.கே.பி.நகர் பகுதியைச் சேர்ந்த குமார், ஷாஜி.

கடந்த மே 2011 ஆம் ஆண்டு அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் ஏரியில் மீன் பிடிப்பதற்காக நண்பர்கள் 3 பேரும் சென்று கொண்டிருந்தனர்.

Court ordered 5 years prison in Poonamalli murder case…

நண்பர்களிடையே வாக்குவாதம்:

அப்போது ரமேசுக்கும், அவரது நண்பர்களான குமார், ஷாஜி ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் இருவரும் சேர்ந்து ரமேஷை தாக்கி கீழே தள்ளினார்கள்.

உயிரிழந்த ரமேஷ்:

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ரமேஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் கைது:

திருமுல்லைவாயல் போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக குமார், ஷாஜி ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

5 ஆண்டுகள் சிறைதண்டனை:

இது தொடர்பான வழக்கு பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, குற்றவாளிகளான குமார், ஷாஜி ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அபராதமும் விதிப்பு:

அபராதம் கட்டத்தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.

வழக்கு விசாரணை:

அரசு தரப்பில் வழக்கறிஞர் அந்தமான் முருகன் ஆஜராகி வாதாடினார். கடந்த 1 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

10 நாட்களில் தீர்ப்பு:

சாட்சிகளிடம் உடனுக்குடன் விசாரணை செய்யப்பட்டு 10 நாட்களிலேயே கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Chennai poonamalli sessions court released a judgment in the case of poonamalli friend murder. Court announced 5 years prison to two murderers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X