போலீஸ் ஸ்டேஷன்களில் சிசிடிவி கேமரா ஏன் தாமதம்... விளக்கம் கேட்டு டிஜிபிக்கு ஹைகோர்ட் உத்தரவு!
சென்னை: தமிழக காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் வேங்கை ஐ.பிரகாஷ்ராஜ் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘2014-ம் ஆண்டு அக்டோபர் 14-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டினம் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட செய்யது முகமது என்ற வாலிபரை சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

போலீஸ் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் ஏராளமாக நடக்கிறது. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும் என்றும், அந்த கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் வைத்து, அந்த அதிகாரிகள் கண்காணிக்கும்படி உத்தரவிட வேண்டும்' என்று அவர் கூறியிருந்தார்.
இதேபோல, ஏ.நாராயணன் என்பவரும் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக டி.ஜி.பி. சார்பில், ஐ.ஜி. எஸ்.டேவிட்சன் ஆசிர்வாதம் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும், கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம் விரைவாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த விஷயத்தில் மாற்றுக்கருத்துகள் எதுவும் இல்லை. டி.கே.பாசு தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ‘நாகரீகம் அடைந்த ஒரு நாடு, தன்னுடைய குடிமக்களை துன்புறுத்தாது என்று கருத்து கூறியுள்ளது. மேலும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டால், தனக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போலீசார் வழங்கவில்லை என்பதை ஒருவரால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்' என்றும் கருத்து கூறியுள்ளது.
இதனால், தமிழக அரசு போலீஸ் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுகுறித்து, 2013-2014-ம் ஆண்டு காவல்துறை மானியம் மீதான விவாதத்தில் பதில் அளித்த தமிழக முதல்-அமைச்சர், தமிழகத்தில் 251 போலீஸ் நிலையங்களில் முதல் கட்டமாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று அறிவித்தார்.
இந்த திட்டத்துக்கான பரிந்துரை தமிழக அரசுக்கு, 2013-ம் ஆண்டு ஜூன் 16-ந் தேதி காவல்துறை சார்பில் அனுப்பிவைக்கப்பட்டது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 1,567 போலீஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 251 போலீஸ் நிலையங்களை தேர்வு செய்து, அதில் ரூ.1.75 கோடி செலவில் கேமரா பொருத்த தமிழக உள்துறை செயலாளர் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி அரசாணை பிறப்பித்தார்.
இந்த உத்தரவின்படி, தனியார் நிறுவனத்திடம் இருந்து ரூ.1.56 கோடிக்கு கேமராக்கள் வாங்கப்பட்டு, பொருத்தப்பட்டு வருகிறது. இதுவரை 251 போலீஸ் நிலையங்களில் 170 போலீஸ் நிலையங்களில் கேமராபொருத் தப்பட்டுவிட்டது. சென்னையில் 11 போலீஸ் நிலையங்களில் கேமரா பொருத்த திட்டமிடப்பட்டது, ஆனால் இதுவரை ஒரு போலீஸ் நிலையத்தில்கூட கேமராவை பொருத்தவில்லை. கோவையில் 20 போலீஸ் நிலையங்களில், 17 போலீஸ் நிலையங்களில் கேமரா பொருத்தப்பட்டுவிட்டது. கேமரா பொருத்தப்படாத போலீஸ் நிலையங்களில், அப்பணி விரைவாக மேற்கொள்ளப்படும்.
எனவே, மனுதாரர்களின் கோரிக்கைகள், தற்போது நிறைவேற்றப்பட்டு வருவதால், இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், போலீஸ் நிலையங்களில் மனித உரிமை மீறப்படுகிறதா? என்பதை உயர் போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் கவுரவமாக நடத்தப்படுகின்றனர். போலீசாருக்கு, பொதுமக்களின் நலன் மீது அக்கறை உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :-
காவல் துறையில் 2013-14-ம் ஆண்டுக்கான கோரிக்கையின் அடிப்படையில் 251 போலீஸ் நிலையங்களில், 170 போலீஸ் நிலையங்களில் மட்டுமே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இப்போது 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கிறது. 10 ஆண்டு திட்டத்தை நிறைவேற்றுவதுபோல், கேமரா பொருத்தும் திட்டத்தை காவல்துறையினர் மேற்கொள்கின்றனர். அதே நேரம், போலீஸ் நிலையங்களில் எந்தெந்த இடங்களில் எல்லாம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது என்பதை டி.ஜி.பி. விளக்கவில்லை என்று மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. எனவே, இதுகுறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். வழக்கு விசாரணையை வருகிற மார்ச் 9-ந் தேதிக்கு தள்ளிவைக்கின்றோம்' என இவ்வாறு
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications