அடுத்தடுத்து சிக்கும் சசிகலா உறவுகள்... பெரா வழக்கில் சிறைவாசம்தானா? பீதியில் தினகரன்
தம் மீதான பெரா வழக்குகளில் சிறைக்கு செல்ல நேரிடலாம் என தினகரன் தரப்பு பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: சசிகலாவின் உறவினர்களான ரிசர்வ் பேங்க் பாஸ்கரன், அவரது மனைவி ஸ்ரீதலா, சசிகலாவின் கணவர் நடராஜன், தினகரன் தம்பி பாஸ்கரன் ஆகியோர் மீதான வழக்குகளில் சிறை தண்டனை உறுதியான நிலையில் தம் மீதான பெரா வழக்குகளின் தீர்ப்பு குறித்து தினகரன் பீதியில் உறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
சசிகலா குடும்பத்துக்கு எதிரான டெல்லியின் தாக்குதல் உக்கிரமடைந்துள்ளது. ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தின் உறவுகள் அனைத்துமே வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றனர்.

சசி உறவினர்களுக்கு சிறை
வருமான வரித்துறையினர் அடுத்தடுத்து சசிகலாவின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சசிகலாவின் பினாமிகளாக இருந்த அவரது அக்கா மகள் ஸ்ரீதலா மற்றும் அவரது கணவர் ரிசர்வ் பேங் பாஸ்கரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தம்பி பாஸ்கரனுக்கும் சிறை
இதேபோல சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலா கணவர் நடராஜன், தினகரனின் தம்பி பாஸ் என்கிற பாஸ்கரனுக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நடராஜன் சிறைக்குப் போவது உறுதியாகி உள்ளது. இது சசிகலா குடும்பத்தை ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பீதியில் தினகரன்
குறிப்பாக பெரா வழக்குகளை எதிர்நோக்கியிருக்கும் தினகரனை பீதிக்குள்ளாக்கியிருக்கிறது. சசிகலா குடும்பத்தின் 355 பேரை வளைத்து விசாரணை நடத்திய வருமான வரித்துறையினர் தினகரனின் சென்னை வீட்டுக்குள் மட்டும் நுழையாமல் இருந்துள்ளனர்.

தினகரன் வழக்கில் தீர்ப்பு
தீவிர அரசியலில் தாம் தலையெடுக்காமல் இருக்க தம்மை நிச்சயம் சிறைக்கு அனுப்புவார்கள் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் தினகரன். இதற்கு முன்னோட்டமாகத்தான் சொந்தங்கள் மீதான வழக்குகளில் தீர்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆகையால் அடுத்து வரும் நாட்களில் தினகரன் மீதான வழக்குகளின் தீர்ப்புகளும் வரலாம்.. தினகரனும் சிறைக்கு செல்லும் காட்சிகளும் அரங்கேறலாம் என்றே கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications