ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: திமுக வேட்பாளருக்கு இந்திய கம்யூ. ஆதரவு
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷூக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக மருது கணேஷ் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு இன்று கூடி விவாதித்தது. இக்கூட்டத்தின் முடிவில் ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications