திமுக கூட்டணியில் இணைய சி.பிஐ முடிவு... சி.பி.எம். தயக்கம்?
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) முடிவு செய்துள்ளதாகவும் ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி தயங்குவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிதான் ஒதுக்க முடியும் என்பதில் அதிமுக பிடிவாதமாக இருந்தது.

இதை இடதுசாரிகள் ஏற்க மறுத்த நிலையில் கூட்டணியே வேண்டாம் என அதிமுக முடிவு செய்தது. இதனால் வேறுவழியின்றி இடதுசாரிகளும் அதிமுக கூட்டணியில் இடம்பெறவில்லை என்று அறிவிக்க நேரிட்டது.
இந்த நிலையில் இடதுசாரிகள் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு வர வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்தார். இதேபோல் திமுகவின் கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் மற்றும் திராவிடர் கழகமும் இடதுசாரிகளுக்கு அழைப்பு விடுத்தன.
இரண்டு இடதுசாரி கட்சிகளும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இதில் திமுக அணியில் இணைவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற விவகாரங்களால் திமுக அணியில் இணைய மார்க்சிஸ்ட் கட்சி தயங்குவதாக கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications