மதுரையில் வாகை சூடுவாரா சி.பி.எம் விக்ரமன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை லோக்சபா தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளருமான பா. விக்ரமன் (வயது 53) அறிவிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ள இவர் 1979ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 35 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார்.

CPI(M) files P. Vikraman for Madurai Seat

இவருக்கு ராதாமணி என்ற மனைவியும், அருண் என்ற மகனும், ஆதிரா என்ற மகளும் உள்ளனர்.

பஸ் கட்டண உயர்வு எதிர்ப்பு, அரசு மருத்துவமனை மேம்பாடு உள்ளிட்ட போராட்டங்களில் தலைமையேற்று நடத்தியவர். பல்வேறு மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் பங்கேற்ற இவர் 21 நாட்கள் (இரண்டு முறை) கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார்.

மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சாதகமான தொகுதி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இம்முறை மதுரையில் வாகை சூடுவாரா வேட்பாளர் விக்ரமன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+