மலைகோட்டை நகரை கைப்பற்றுவாரா சி.பி.எம் ஸ்ரீதர்?
திருச்சி: திருச்சி மக்களவைத் தொகுதியில் சிபிஐ (எம்) வேட்பாளராக கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், திருச்சி மாவட்டச் செயலாளருமான எஸ். ஸ்ரீதர் (வயது 56) போட்டியிடுகிறார்.
எம்.ஏ., வரை படித்துள்ள இவர் 1974ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 40 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு எஸ். ருக்மணி என்ற மனைவியும், எஸ். விவேக் என்ற மகனும், எஸ், ஆர்த்தி என்ற மகளும் உள்ளனர்.

கட்சி மற்றும் தொழிற்சங்க போராட்டங்கள் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்திட முயற்சி போன்ற போராட்டங்களில் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தியவர்.
பொன்மலை பணி மனையில் தேர்வு செய்யப்பட்ட கலாசி தொழிலாளர்களை வேலைக்கு எடுத்திட வலியுறுத்தி நடத்திய போராட்டத்தில் பங்கேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சியில் தொழிலாளர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான ஸ்ரீதர், போட்டி வேட்பாளர்களை வென்று மலைக்கோட்டையில் வாகை சூடுவாரா என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் எதிர்பார்ப்பாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications