வடசென்னையில் வெற்றி பெறுவாரா? சிபிஐ (எம்) வேட்பாளர் வாசுகி

பி.காம் படித்துள்ள இவர் 1977-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். கடந்த 37 ஆண்டுகளாக தொடர்ந்து கட்சி பணியாற்றி வருகிறார்.
இவரது தந்தை ஆர். உமாநாத் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றியவர். தற்போது கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக உள்ளார்.
இவரது தாய் மறைந்த பாப்பா உமாநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாதர் இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். இவரது கணவர் தோழர் ஏ.பி.விஸ்வநாதன், மகள் அனுபமா.
வங்கி ஊழியராக இருந்து
வங்கி ஊழியராகப் பணியாற்றிய இவர் 2000-ல்-விருப்ப ஓய்வு பெற்று கடந்த 14 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட்டு வருகிறார்.
மாதர் சங்க பொறுப்பு
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய இவர் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்த பல்வேறு போராட்டங்களில் மாநிலம் முழுவதும் பங்கேற்றுள்ளார்.
போராட்ட களத்தில்
பிரேமானந்தா, சிதம்பரம் பத்மினி போன்ற போராட்டங்கள் உள்ளிட்டு முக்கிய பங்காற்றியவர். கோகோ கோலாவை எதிர்த்து சிவகங்கை படமாத்தூரில் நடைபெற்ற போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர்.
மாணவிகள் பிரச்சினைக்கு
அதேபோல் சென்னை, மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, விடுதி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும், உத்தப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டவர். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவர். இவரை வடசென்னை வேட்பாளராக களம் இறக்கியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களை தனது பிரச்சார யுக்தியால் தோற்கடிப்பாரா என்பது தோழர்களின் எதிர்பார்ப்பு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications