போரூர் ஏரியை மீட்க போராட்டம்... மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ உள்ளிட்ட 200 பேர் கைதாகி விடுதலை
சென்னை: போரூர் ஏரியை மீட்கக்கோரி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ பீம்ராவ் கைது செய்யப்பட்டார். அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் போரூர் ஏரியை முழுமையாக மீட்டு கையகப்படுத்தி பாதுகாக்க கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ. பீம்ராவ் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பெண்கள், பொதுமக்கள் என 200 பேர் இன்று காலை போரூர் ரவுண்டானாவில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் போரூர் ஏரியை மீட்டு பாதுகாக்க வேண்டும். போரூர் மேம்பால பணியை காலதாமதம் செய்யாமல் உடனே தொடங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சென்னைக்கு குடிநீர் வழங்கும் போரூர் ஏரியை அரசு மீட்டு முழுமையாக கையகப்படுத்த வேண்டும். அங்குள்ள குடிநீரை பாதுகாக்க வேண்டும். மேலும் போரூர் மேம்பால பணிகள் தாமதப்பட்டுக் கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே போரூர் மேம்பால பணியை உடனே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பீம்ராவ் எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க முயன்றார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்ற வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போரூர் ரவுண்டானாவில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் அரைமணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு உதவி கமிஷனர் குழந்தைவேலு விரைந்து வந்தார். பின்னர் போலீசார் மறியல் செய்தவர்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்ற முயன்றனர். பெண் போலீசார் பெண்களை பிடித்து இழுத்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பீம்ராவ் எம்.எல்.ஏ., பெண்கள் உள்பட 200 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications