டாஸ்மாக் கடை முற்றுகை: சிபிஎம் எம்எல்ஏ பாலபாரதி கைது- தடியடி!
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் மாவட்டம் அங்குவிலாஸ் இறக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பாலபாரதி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தகவலறிந்த வட்டாட்சியர், டாஸ்மாக் பொதுமேலாளர் ஆகியோர் பாலபாரதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
டாஸ்மாக் கடையை அகற்றும் வரை அறப்போராட்டம் தொடரும் என அவர் கூறினார். இதனையடுத்து, பாலபாரதியை காவல்துறையினர் கைது செய்தனர்.
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி ஏராளமானோர் இன்று இந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
கைது செய்யப்பட்ட பாலபாரதி எம்.எல்.ஏவை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாதர் சங்கத்தினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications