50 பூத்துகளில் முறைகேடு… கண்துடைப்புக்கு ஒரு பூத்தில் மட்டும் மறுவாக்குப் பதிவு: சி.மகேந்திரன்
சென்னை: ஆர்.கே.நகரில் 50க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டுக்கள் போட்டு அதிமுகவினர் முறைகேடுகளில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் கண்துடைப்புக்காக மறுவாக்குப்பதிவு நடத்தப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி.மகேந்திரன் கூறியுள்ளார். வாக்காளர்களின் கைரேகையை பதிவு செய்து வாக்களிப்பதன் மூலமே முறைகேடுகளை தடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமுள்ள 230 வாக்குச்சாவடிகளில் 181வது வாக்குச்சாவடியில் அதிமுகவினர் கள்ள ஓட்டுகள் போட்டதாக புகார்கள் எழுந்தது.
அந்த வாக்குச்சாவடியின் அதிகாரி, வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத நபர்களை வாக்களிக்க அனுமதித்ததாக தேர்தல் பார்வையாளரும் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து 181வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இதனைப் பார்வையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி.மகேந்திரன், ஆர்.கே.நகரில் 50க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடியில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் புகார் தெரிவித்தோம். ஆனால் கண்துடைப்புக்காக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்துவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டை மீறி கள்ள ஓட்டுகள் போடப்பட்டிருப்பதற்கு மிக வெளிப்படையான ஒரு உதாரணம் இது. இதற்காக தேர்தல் ஆணையம் வெட்கப்பட வேண்டும். இதை பாதுகாப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் அனைவரும் இதற்கான வருத்தத்தை வெளியிட வேண்டும் என்றும் மகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக தேர்தல் அதிகாரி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறிய அவர், ஆர்.கே.நகரில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாகவும், தலைமைத் தேர்தல் அதிகாரி பற்றியும் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்போவதாகவும் சி.மகேந்திரன் தெரிவித்தார். மேலும், கைரேகையை பதிவு செய்து வாக்களிப்பதன் மூலமே முறைகேடுகளை தடுக்க முடியும் என்றும் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications