கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்! தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை தேவை! CPI
சென்னை: கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் பாலியல் வன்மச் செயலில் ஈடுபட்டதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்துள்ள நிலையில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தவெக உறுப்பினர் அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதோடு, மதுபோதையில் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று ரகளையில் ஈடுபட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு தனி பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.

தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் கண்ணியக் குறைவான, ஒழுக்கக்கேடான, பாலியல் வன்மச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
