ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுக்கு ஆதரவு!
ஆர்கே நகர் இடைத்தேர்லில் மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
கோவை: ஆர்கே நகர் இடைத்தேர்லில் மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, அதிமுக அம்மா கட்சி ஆகியவை கடந்த முறை நிறுத்திய வேட்பாளர்களையே இம்முறையும் களமிறக்கியுள்ளன.

ஆனால் கடந்த முறை வேட்பாளரை அறிவித்த மார்க்சிஸ்ட் கட்சி இம்முறை வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் அக்கட்சியின் மாநிலக் குழுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது.
அப்போது ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என அவர் கூறினார். மக்கள் நலனில் அக்கறையில்லாத அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பாடம் புகட்டும் வகையில் திமுகவுக்கு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது மேடையில் இருந்து திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுக்கப்படுவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம்












Click it and Unblock the Notifications