ஜூலி வீட்டில் பூஜையாமே.. "டுபாக்கூர்" டேனியல் செய்த காரியம்.. அதுவும் 15 நாட்கள்.. அதிர்ந்த அரியலூர்
அரியலூர்: ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்.. அப்படித்தான் ஜூலியும் ஏமாந்து போயுள்ளார்.. என்ன நடந்தது தெரியுமா?
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ளது மேல மைக்கேல்பட்டி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் தனிஸ்லாஸ்.. இவரது மனைவி பெயர் ஜூலி.. 48 வயதாகிறது.
தனிஸ்லாஸுக்கு இவர் 2வது மனைவி ஆவார்.. ஜூலிக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது. அவர் கணவர் இறந்துவிட்டார்.. தனிஸ்லாஸின் முதல் மனைவியும் இறந்துவிட்டார்..

உடல்நலக்குறைபாடு: அதனால், முதல் கணவனுக்கு பிறந்த மகன்களுடன், தனிஸ்லாஸுடன் வசித்து வருகிறார் ஜூலி.. இதில் ஒரு மகனுக்கு 10 வருடங்களாகவே மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. எங்கெங்கோ மருத்துவம் பார்த்தும் பலன் இல்லையாம்.. அதனால், மகனை குணப்படுத்த வேறு ஏதாவது வழியிருக்கிறதா என்று ஆராய்ந்தார் ஜூலி.. அப்போதுதான், அருகில் உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மூலம், திண்டிவனத்தை சேர்ந்த கொல்லிமலை சித்தர் தியாகம் டேனியல் என்பவர் பற்றி தெரியவந்துள்ளது..
டேனியலுக்கு 62 வயதாகிறது.. அவரது மனைவி தீபா ஜெனிபர்.. இவருக்கு 43 வயதாகிறது. அதனால், உறவினர்களுடன் சென்று ஜூலி தியாகம் டேனியேலை சந்தித்துள்ளார். விஷயத்தை சொன்னதுமே, "உங்கள் வீட்டில் பில்லி சூனியம் வைத்திருக்கிறார்கள்.. அதனை எடுக்க வேண்டும்" என்று டேனியல் சொல்லி உள்ளார்.. அத்துடன் தன்னுடைய மனைவி தீபாவையும் அழைத்துக் கொண்டு, ஜூலியின் வீட்டிற்கு பூஜை செய்ய வந்துள்ளார்..
செப்புத் தகடு எங்கே: வீட்டிற்குள் 3 அடி பள்ளம் தோண்டியிருக்கிறார்.. பிறகு திடீரென குழிக்குள்ளிருந்து, ஒரு செப்பு தகடு எடுத்து காண்பித்து ஜூலியிடம் காண்பித்துள்ளார்.. அந்த தகடு பளபளவென மின்னியது.. உடனே டேனியல், "இந்த இடத்தில், 8 அடி ஆழத்திற்கு கீழே புதையல் உள்ளது.. அதை உடனே வெளியே எடுக்காவிட்டால் நீ இறந்து விடுவாய், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லி ஜூலியை பயமுறுத்தி உள்ளார்.. ஜூலியும் அந்த பரிகார பூஜைகளுக்கு ஓகே சொன்னார்..
இப்படியே பயமுறுத்தி பயமுறுத்தி 15 நாட்கள் ஜூலி வீட்டிலேயே தங்கி பூஜை செய்து வந்துள்ளனர். இதற்காக ஜூலியிடம், வங்கி மூலமாகவும் நேரடியாகவும் பலமுறையாக மொத்தம் ரூ.25 லட்சம் வாங்கியிருக்கிறார்கள்.. ஆனால், டேனியல் கடைசிவரை எந்த புதையலையும் வெளியே எடுக்கவில்லை.. இதனால், 25 லட்சம் பணம் குறித்து டேனியலிடம் ஜூலி கேட்டுள்ளார். அதற்கு அவர், இப்படியே பணம் கேட்டு தொல்லை தந்தால், நரபலி கொடுக்கவும் தயங்க மாட்டோம் என்று ஜூலியை மிரட்டி உள்ளனர்..
ஆசைவார்த்தை: அதற்குபிறகுதான், அவர்களிடம் தான் ஏமாந்ததை ஜூலி அறிந்து, உடனடியாக மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட குற்றப்பிரிவில் பிரிவில் 2021ல் புகார் அளித்தார்.. அந்த புகாரின்பேரில், அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக பதுங்கியிருந்த தியாகம் டேனியல் மற்றும் தீபாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.. விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications