வழக்கறிஞர்களே நீதித்துறையை விமர்சிக்கலாமா? ஹைகோர்ட் நீதிபதி கிருபாகரன் வேதனை!
வழக்கறிஞர்கள் நீதித்துறையை விமர்சிப்பது நீதித்துறையை தற்கொலைக்கு தள்ளுவதற்கு சமம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை: வழக்கறிஞர்கள் நீதித்துறையை விமர்சிப்பது நீதித்துறையை தற்கொலைக்கு தள்ளுவதற்கு சமம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதி நீக்கம் செல்லும் என்றும் நீதிபதி சுந்தர் தகுதிநீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பளித்தனர்.
இருமாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் கடுமையாக விமர்சித்தனர்.

தங்கதமிழ்ச்செல்வன் விமர்சனம்
மத்திய மாநில அரசுகள் நீதித்துறையை விலைக்கு வாங்கி விட்டதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன் கடுமையாக விமர்சித்தார். கிடைக்கும் இடங்களில் எல்லாம் நீதித்துறையை வாரி வந்தார் தங்க தமிழ்ச்செல்வன்.

சூர்யபிரகாசம் முறையீடு
தினகரனின் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் நீதித்துறையை விமர்சிப்பதை எதிர்த்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சூர்யபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

தற்கொலைக்கு சமம்
இதுதொடர்பாக விசாரித்த நீதிபதி கிருபாகரன் நீதித்துறையை விமர்சிப்பதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் வழக்கறிஞர்கள் நீதித்துறையை விமர்சிப்பது நீதித்துறையை தற்கொலைக்கு தள்ளுவதற்கு சமம் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

தலைமை நீதிபதியின் கவனத்துக்கு
மனுதாரர்கள் மட்டுமல்ல வழக்கறிஞர்களும் நீதித்துறையை விமர்சிப்பது தற்கொலையை தூண்டுவதற்கு சமம் என்று தெரிவித்தார். சூர்யபிரகாசத்தின் முறையீட்டை தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்கிறேன் என்றும் அவர் கூறினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications