இன்றோடு 30 நாள்.... எப்படி இருக்கிறது கருணாநிதி சமாதி?
தினந்தோறும் கருணாநிதி சமாதிக்கு பொதுமக்கள் அதிகமாக வந்து செல்கிறார்கள்.
Recommended Video

சென்னை: இன்றோடு 30 நாள் ஆகிறது.... எப்படி இருக்கிறது கருணாநிதி சமாதி?
பலவித ரசனைகளால் உருவானவர்தான் கருணாநிதி. அவரது ரசனைக்கேற்றபடியே அவரது சமாதியும் தினம் தினம் புதுபுது அலரங்களால் பளிச்சிட்டு நிற்கிறது.
தினமும் ஏதாவது ஒரு பழம், அல்லது பூக்களினால் உதயசூரியன் பிரகாசிக்கிறது. அந்த பிரகாசத்தில் "அப்பா, இதோ வந்துவிட்டேன்" என்றுகூறி மெரினா காற்றில் விடியு வேளையிலேயே படபடத்து அடித்துகொள்கிறது 'முரசொலி'.

கருப்பு கண்ணாடி
முரசொலி வந்து அங்கு அமர்ந்ததுமே அங்கு வைக்கப்பட்டிருக்கும் பேனாவும், கருப்புக் கண்ணாடியும் சந்தோஷத்தில் அசைந்து கொடுக்கின்றன. அது சமாதி இல்லை... உயிரற்ற பந்தங்களின் ஒன்றுகூடல்! தன் தலைவனுக்கு தங்கள் இருத்தலை ஏதாவது ஒரு விதத்தில் இணைத்து கொள்ளும் பாசம்!

வெளிநாட்டு ஆட்கள்
சமாதியில் எப்போதுதான் கூட்டம் இல்லை... பகலெல்லாம் கூட்டம் இருக்கிறதே என்று ராத்திரி நேரங்களில் வந்தால் அப்போதும் மக்கள் தலைகள்! வெளியூர்களிலிருந்து எதற்காக சென்னை வருகிறார்களோ இல்லையே கால்கள் தானாக மெரினாவை நோக்கி நடக்க ஆரம்பித்து விடுகின்றன. இதில் ஆங்காங்கே வெளிநாட்டு தலைகளும் உண்டு!

மொத்த உணர்வுகள்
கருணாநிதியை அடக்கம் செய்த நாளிலிருந்து அவரது குடும்பத்தில் யாராவது ஒருத்தர் சமாதிக்கு வந்து விடுகிறாகள். அது புதுப்பதவியை ஏற்றுக் கொண்டு வாங்க ஆசீர்வாதம் ஆகட்டும், அமைதி பேரணியை நடத்துவதற்கான ஆசீர்வாதம் ஆகட்டும் எல்லாமே இங்கேதான்! குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சியோ, துக்கமோ, கண்ணீரோ, எதுவானாலும் அந்த உணர்வினை சமாதியில் கொட்டிவிட்டு போய் கொண்டுதான் இருக்கிறார்கள்!

நேராக வந்த விஜய்
வெளிநாட்டிலிருந்து வீட்டுக்கு கூட போகாமல் நேராக சமாதி வந்தார் விஜய். இப்படித்தான் நடிகை ராதிகாதாவும். கருணாநிதியை அடக்கம் செய்த மறுநாளிலிருந்தே திரிஷா உட்பட பலர் சென்று மண்டியிட்டு மரியாதை செலுத்தினர். பேனா, கருப்பு கண்ணாடி வைத்து சமாதியையே வடிவமைத்தே விட்டார் மயில்சாமி.

குலுங்கி அழுத விஜயகாந்த்
ஆயிரம் அரசியல் பார்வை இருந்தாலும் அழகிரி நடத்திய காட்டிய மவுன ஊர்வலமானது தந்தைக்கு மகனின் பாச வெளிப்பாடே! தான் ஏற்றுக் கொண்ட ஒரே தலைவன் என்று அடிக்கடி சொல்லும் வைகோ தன் தொண்டர்களுடன் மவுனமாக ஊர்வலத்தினை சமாதி வரை சென்று மலர்வளையம் வைத்துவிட்டு அஞ்சலி செலுத்தினார். ஆஸ்பத்திரிக்கும் வரமுடியவில்லை... அஞ்சலி செலுத்தவும் வரமுடியவில்லை என்ற ஆதங்கத்திலும் கவலையிலும், சென்னை ஏர்போர்ட்டிலிருந்து நேராக சமாதிக்கு சென்று குலுங்கி குலுங்கி அழுதார் விஜயகாந்த்.

இசைக்கலைஞர்கள்
இன்று 30-வது நாள் என்பதால் கவிதாஞ்சலி நடைபெறுகிறது. அதேபோல இசைக்கலைஞர்கள் குறிப்பாக நாதஸ்வர கலைஞர்கள் இன்று ஒன்று திரண்டு கருணாநிதி சமாதி முன்பு நாதஸ்வரம் வாசித்து அஞ்சலி செலுத்தினர். இப்படி 30 நாளோடு முடிந்துவிடக்கூடிய ஒன்றா இந்நிகழ்வுகள் எல்லாம்? நாளுக்கு நாள் சமாதியின் சிறப்பையும், அதன் வலிமையையும் தொண்டர்களோ, பொதுமக்களோ என்றென்றும் கூட்டிக் கொண்டேதான் செல்கிறார்கள்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications