வெள்ளக்காடாகிய கடலூர்: உணவு, குடிநீர் கேட்டு சாலை மறியலில் குதித்த மக்கள்
கடலூர்: மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் உணவு, குடிநீர் கிடைக்காமல் மக்கள் சாலை மறியல் செய்து வருகிறார்கள்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த நான்கு நாட்களாக கடலூர் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. விடாமல் பெய்த மழையால் கடலூர் மாவட்டம் வெள்ளக்காடாகிவிட்டது.
இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். கனமழைக்கு கடலூர் மாவட்டத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர்.

கனமழையால் வாழை, கரும்பு, நெல் பயிற்கள் சேதம் அடைந்துள்ளன. 75 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் இல்லாததாலும், உணவு, குடிநீர் தட்டுப்பாடாக இருப்பதாலும் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் குடிநீர், உணவு கேட்டு மக்கள் பல இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இது குறித்து மக்கள் கூறுகையில்,
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அவ்வாறு செய்யவில்லை. பேரிடர் மேலாண்மை குழுவின் பணிகள் வெறும் கண்துடைப்பு தான். உள்ளாட்சி பிரதிநிதிகளோ மக்களுக்கு நிவாரணப் பணியை செய்யாமல் அதிகாரிகள் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications