சென்னை, கடலூர் மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை
சென்னை: தொடர் மழை பெய்வதால் சென்னை மாவட்டத்திலும் மழை வெள்ளத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடலூர் அருகே கரையைக் கடந்தது. இந்த தாழ்வு மண்டலத்தால் கடலூர் மாவட்டத்தில் கனமழை கொட்டி வெள்ளக்காடானது.

மாவட்டத்தின் அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. கடலூர் கெடிலம் ஆற்றில் பெரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இம்மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தொடர் மழை பெய்து வருவதாலும் வெள்ளம் வடியாத நிலையில் கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
