For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலூர் மாவட்ட கல்வி அலுவலக மாடியில் நின்று ஆசிரியர் தற்கொலை மிரட்டல்.. பரபரப்பு!

கல்வி அலுவலக மாடியில் ஏறி ஆசிரியர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    மாவட்ட கல்வி அலுவலக மாடியில் நின்று ஆசிரியர் தற்கொலை மிரட்டல்-வீடியோ

    கடலூர்: கடலூரில் கல்வி அலுவலக மாடியில் ஏறி தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர் மஞ்சக்குப்பத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் உள்ளது. இது 2 மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இன்று காலை இந்த அலுவலகத்துக்கு திட்டக்குடியை சேர்ந்த ஆசிரியர் சேரன் 52 அங்கு வந்தார். வந்தவர்,

    திடீரென அலுவலக மாடிக்கு வேகமாக ஏறினார். 2-வது மாடியில் ஏறி நின்று தான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

    போலீசார் பேச்சுவார்த்தை

    போலீசார் பேச்சுவார்த்தை

    இதனை பார்த்த அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கடலூர் புதுநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை மிரட்டல் விடுத்த ஆசிரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாடியில் இருந்து கீழே இறங்குங்கள் என்று கூறினர். ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டதுடன், இறங்கி வரமாட்டேன் என்று தெரிவித்துவிட்டார்.

    பக்கவாத நோயால் தவிப்பு

    பக்கவாத நோயால் தவிப்பு

    பின்னர் அலுவலக மாடிக்கு சென்ற போலீசார் அந்த ஆசிரியரை மீட்டு மாடியில் இருந்து கீழே அழைத்து வந்தனர். தற்கொலை மிரட்டல் விடுத்தது குறித்து அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் தான் கொண்டு வந்த மனுவை போலீசாரிடம் கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவன். என் பெயர் சேரன். மங்களூர் அரசு பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்தேன். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு நான் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டேன். எனது ஒரு கை செயல்படவில்லை.

    பணி வழங்கவில்லை

    பணி வழங்கவில்லை

    பின்னர் நான் வேலைக்கு செல்லவில்லை. அவர்களும் என்னை மீண்டும் வேலைக்கு அழைக்கவில்லை. இது குறித்து முதன்மை கல்வி அலுவலரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து பணி வழங்குமாறு மனு கொடுத்தேன். ஆனால் இதுவரை எனக்கு யாரும் பணி வழங்கவில்லை. என் குடும்பம் வறுமையில் வாடுகிறது. என் மனைவி விபத்தில் இறந்து விட்டார். என் மகன் என்ஜினீயரிங் படிப்பை விட்டு விட்டு வேலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்.

    ஆசிரியரிடம் விசாரணை

    ஆசிரியரிடம் விசாரணை

    என் மரணத்திற்கு பிறகாவது என்னை போல் பாதிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களை அலைக்கழிக்காமல் அவர்களுக்கு தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. பின்னர் சேரனை புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    English summary
    The Teacher of the Cuddalore district headquarters was on the 2nd floor and threatened to commit suicide. The police informed the investigator and investigated the case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X