ரூ. 4000த்துக்கு வெறும் ஸ்லிப்... ரூ.2000க்கு 700 கூடுதல்.. குழப்பிய ஏ.டி.எம்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள ஏடிஎம்மில் ரூ.2000 பணம் எடுத்தவருக்கு இனாமாக ரூ.700 கிடைத்ததால் அவர் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனார். அதேசமயம் ரூ.4000 கேட்டவருக்கு வெறும் ஸ்லிப் மட்டுமே வந்ததால் அவர் அதிர்ச்சியடைந்ததார்.
நாகர்கோவில் கிறிஸ்வத பெண்கள் கல்லூரி அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் கருவியில் நேற்று பணம் எடுக்க சென்றவர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் காத்திருந்தது.

ஒருவர் ரூ.4 ஆயிரம் எடுப்பதற்காக ஏடிஎம் கார்டை நுழைத்துள்ளார். அவருக்கு வங்கி செயல்பாடுகள் முடிந்த பின்னர் பணம் எதுவும் வரவில்லை. ஆனால் ரூ.4 ஆயிரம் எடுத்து விட்டதாக ஸ்லிப் வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வங்கி நிர்வாகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு விபரங்களை தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர் ஏடிஎம் விரைந்து வந்தார். அப்போது இன்னொருவர் ரூ.2 ஆயிரம் பணம் எடுக்க ரூ.700 அதிகமாக வந்தது. இதனை கண்ட வங்கி மேலாளர் அதிகமாக வந்த ரூ.700ஐ அந்த நபரிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொண்டார்.
உடனே அங்கிருந்த பொதுமக்கள் பணம் எடுப்பவர்களுக்கு கூடுதல் பணம் வருவதும், சிலருக்கு பணம் வருமாலேயே பணம் எடுத்து விட்டதாக ஸ்லிப் வருவதாகவு்ம் மேலாளரிடம் புகார் தெரிவித்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றி கொண்டது. சிறிது நேரம் அங்கிருந்து அந்த ஏடிஎம்மின் செயல்பாடுகளை கண்காணித்து வங்கி மேலாளர் பின்னர் ஏடிஎம்மின் அறை ஷட்டரை பூட்டி விட்டு சென்று விட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications