100 ஆண்டுகால சரித்திரத்தில் இல்லாத புயல்... மீனவர்களை தேடும் பணி தொடரும்: நிர்மலா சீதாராமன்

100 ஆண்டுகால சரித்திரத்தில் இல்லாத புயல் தாக்கியுள்ளதாக மத்திய பாதுகாப்ப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: 100 ஆண்டுகால சரித்திரத்தில் இல்லாத வகையில் புயல் தாக்கியுள்ளது.. மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் மீனவர்கள் மீட்பு பணிகள் குறித்து பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்திய பின்னர் ஞாயிறு நள்ளிரவில் செய்தியாளர்களுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி:

100 ஆண்டுகால சரித்திரத்தில் இல்லாத புயல் தற்போது தாக்கியுள்ளது. இது மிகவும் வருத்தத்துக்குரியது. கடந்த 30-ந் தேதி முதல் மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

nisitharaman

வெளிநாட்டு கப்பல்கள் உதவியுடன் 36 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 68 படகுகளில் இருந்த 952 மீனவர்கள் மகராஷ்டிராவில் பாதுகாப்பாக உள்ளனர்.

கடந்த 29-ந் தேதிக்கு முன்னர் கடலுக்கு போனவர்கள் குறித்த விவரங்கள் இல்லை. அதேபோல் கேரளாவில் பணிபுரியும் தமிழக மீனவர்கள் குறித்த விவரங்களும் இல்லை. இவற்றை சேகரித்து வருகிறோம்.

ஓகி புயல் குறித்து தமிழகம், கேரளாவுக்கு முன்னரே மத்திய அரசு தகவலை தெரிவித்திருந்தது. இதுவரை 357 மீனவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

தற்போது மீனவர்கள் 50 கடல் மைலுக்கு அப்பாலும் தேடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் தேடுதல் நடவடிக்கையில் மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த ஒருவரையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

மீனவர்கள் தெரிவித்துள்ள ஜிபிஎஸ் கருவிகளின் விவரங்களின் அடிப்படையில் காலை முதல் மீட்புப் பணிகள் தொடரும். மேலும் கன்னியாகுமரியில் மீனவர்களுக்காக ஒரு ஹெலிகாப்டர் தளம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் 96 மீனவர்களைக் காணவில்லை என அறிக்கை கொடுத்திருந்தார். அதனடிப்படையில்தான் நானும் 96 மீனவர்களைக் காணவில்லை என தெரிவித்திருந்தேன். எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு மீனவரையும் அவர்களது குடும்பத்தில் இணைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+