கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி
மூச்சு திணறல் காரணமாக மீண்டும் தா.பாண்டியன் அனுமதிக்கப்பட்டார்.
Recommended Video

சென்னை: மூச்சு திணறல் பிரச்சனை காரணமாக தா.பாண்டியன் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் மாநில செயலாளருமான தா.பாண்டியனுக்கு 85 வயதாகிறது. சமீப காலமாக சிறுநீரக பிரச்சினைக்காக இவர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்தசில தினங்களுக்கு முன்பு தா.பாண்டியனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து, உடனடியாக அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தா.பாண்டியனுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர்.
அப்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தா.பாண்டியனை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனைக்குச் சென்று தா.பாண்டியனை நேரில் சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு வந்தனர். இதையடுத்து இரண்டு தினங்களில் தா.பாண்டியனும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் தா.பாண்டியனுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மேலும் சிறுநீர் பிரச்சினையும் சேர்ந்து கொண்டதால், உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது தா.பாண்டியனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications