திமுகவுடன் தேமுதிக கைகோர்த்தால் நாம அதிமுக அணிக்கு போயிடலாம்- வைகோவை இழுக்கும் தா.பா.!!
சென்னை: திமுகவுடன் தேமுதிக கை கோர்க்கும் நிலையில் மக்கள் நலக் கூட்டணி, அதிமுகவு கூட்டணியில் ஐக்கியமாகிவிடலாம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் இழுத்துக் கொண்டிருக்கிறாராம்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் கட்சிகள், கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. குறிப்பாக தேமுதிகவை வளைப்பதில் திமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி ஆகியவை மும்முரம் காட்டி வருகின்றன.
ஆனாலும் பாஜக, மக்கள் நலக் கூட்டணிக்கு டாடா காட்டும் மூடில்தான் விஜயகாந்த் இருந்து வருகிறார். இதனை உணர்ந்தே மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ, விஜயகாந்த்தை குட்டு வைத்து விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.

திமுக- தேமுதிக
தேமுதிகவைப் பொறுத்தவரையில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் கணிசமான இடங்கள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பல லாபம் இருப்பதாக கணக்குப் போடுகிறது. இதனால் திமுகவும் விஜயகாந்த்துக்கு இணக்கமாகவே இறங்கி செயல்பட்டு வருகிறது.

சிறுத்தைகள் தாவல்?
கிட்டத்தட்ட விஜயகாந்த் திமுக பக்கம் போய்விடுவார் என்பது உறுதியாகி இருக்கிறது. அப்படி திமுக, தேமுதிக, காங்கிரஸ் இணைந்து மெகா கூட்டணி உதயமானால் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகளும் கூட திமுக பக்கம் தாவக் கூடும் எனக் கூறப்பட்டு வருகிறது.

தா.பா. ஐடியா
இத்தகைய சூழலில் பேசாமல் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக ஆகியவை என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி போயுள்ளனர். இது குறித்து வைகோவிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன், அப்படி தேமுதிக- திமுக கூட்டணி அமைந்தால் பேசாமல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மக்கள் நலக் கூட்டணி இணைந்துவிடுவதுதான் நல்லது என ஆலோசனை கூறியிருக்கிறார்.

ஆகட்டும் பார்க்கலாம்...
வைகோ இதை மவுனமாகக் கேட்டுக் கொண்டு, அப்படி ஒரு நிலைமை வருமான்னு தெரியலை.. வரும்போது பார்க்கலாமே என்றாராம்... தா.பா.வைப் பொறுத்தவரையில் எதற்கு இந்த மக்கள் நலக் கூட்டணி? அதிமுகவை வெளிப்படையாக ஆதரிக்கலாமே என்பதுதான் தொடக்கம் முதலே மேற்கொண்டு வரும் நிலைப்பாடு. ஆகையால் எப்படி இடதுசாரிகளையும் மதிமுகவையும் அதிமுக அணிக்கு கொண்டு சேர்ப்பதில் தா.பா. படு தீவிரமாக இருக்கிறாரம்...
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications