1 மாதத்திற்கு முன்பே கடத்த முயன்றனர்.. படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞரின் மனைவி
கோவை: என்னை ஒரு மாதத்திற்கு முன்பே கடத்திச் செல்ல முயன்றனர். அப்போது நான் கத்திக் கூச்சல் போட்டதால் அந்த முயற்சி பலிக்கவில்லை. இப்போது எனது கணவரைக் கொன்று விட்டனர் என்று கூறியுள்ளார் உடுமலைப்பேட்டையில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் மனைவி கவுசல்யா.
இதுதொடர்பாக புதியதலைமுறைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், பிற்பகல் 2 மணி அளவில் சம்பவம் நடந்தது. மூன்று நான்கு பேர் வந்தாங்க. இதே போல 1 மாசத்துக்கு முன்னாடி 4 பேர் வந்தாங்க. கார்ல கூட்டிட்டுப் போக பாத்தாங்க. நான் கத்திட்டேன். அப்புறம் போலீஸ் எல்லாம் வந்து ஸ்டேஷன் கூட்டிட்டு போயிட்டாங்க.

அவங்க யார்னு தெரியல. இரும்பு கம்பிய வச்சு அடிச்சாங்க. நான் அப்படியே மயங்கி விழுந்துட்டேன். எழுந்து பாக்கும் போது அவர அடிச்சிட்டிருந்தாங்க. அவங்கள பாத்தா என்னால அடையாளம் காட்ட முடியும். 2 வாரம் முன்னாடி வீட்டிலிருந்து வந்திருந்தாங்க. ஏதாச்சும் ஆச்சுன்னா எங்களுக்குச் சம்பந்தமில்லை என்று அவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார் கவுசல்யா.












Click it and Unblock the Notifications