குலசேகரபட்டினம் தசரா திருவிழா.. சூரசம்ஹாரத்தில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் !
தூத்துக்குடி: பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் நள்ளிரவில் நடந்த மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விரதம் இருந்து வந்த பல லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வந்து தங்களது வலது கையில் காப்பு கட்டி தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வந்தனர்.

10-ம் திருநாளான நேற்று பக்தர்கள் வசூல் செய்த காணிக்கைகளை கோவிலுக்கு கொண்டு சேர்ப்பதற்காக காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அம்மனை தரிசித்து விட்டு கடற்கரையில் வேடம் அணிந்த பக்தர்களும் பொதுமக்களும் லட்சக்கணக்கில் திரண்டனர்.
நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு சென்றார். கடும் விரதம் இருந்த காளி வேடம் அணிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அன்னை முத்தாரம்மனை பின் தொடர்ந்து ஓம் காளி, ஜெய்காளி என்று கோஷமிட்டு சென்றனர். நள்ளிரவு 1 மணி அளவில் மகிஷா சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் கடற்கரையில் எழுந்தருளிய சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்பு சிதம்பரேஸ்வரர் கோவில் அருகிலும் தொடர்ந்து கோவில் கலை அரங்கத்திலும் அம்மன் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்பு இன்று அதிகாலை அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் அன்னை முத்தாரம்மன் எழுந்தருளி ஊர் பவனிக்கு புறப்பட்டு சென்றார்.
இந்தியாவில் மைசூரில்தான் தசரா விழா கோலாகலமாக நடைபெறும். அதற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணத்தில் தான் அதே போன்று பெரிய அளவில் தசரா விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications