தப்பி ஓடிய தஷ்வந்த்.. சென்னைக்கு அழைத்து வரும் திட்டம் தவிடுபொடி!
தாயை கொலை செய்துவிட்டு மும்பையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த் இன்று இரவு சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.
Recommended Video

சென்னை : சென்னையில் தாயை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் இன்று இரவு சென்னைக்கு அழைத்து வரப்படுவதாக இருந்த நிலையில் அவர் தப்பி விட்டதால் திட்டம் பாழாகியுள்ளது.
போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாபு- ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஹாசினி (7). கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த ஹாசினியை அதே குடியிருப்பில் வசித்துவரும் மென்பொருள் பொறியாளர் தஷ்விந்த் (22) பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பெட்ரோல் ஊற்றி படுகொலை செய்தார்.

இவரை கைது செய்த போலீஸார் இவர் மீது குண்டர் சட்டத்தை போட்டனர். ஆனால் இதை எதிர்த்து இவரது தந்தை சேகர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டு அவர் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார்.
போதைக்கு அடிமையான தஷ்வந்த், தாய் சரளாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்னர் சரளாவிடம் தஷ்வந்த் பணம் கேட்டபோது அவர் கொடுக்க மறுக்கவே அவரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்தார்.
இதையடுத்து சரளா அணிந்திருந்த 25 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டார். சேகரின் புகாரின்பேரில் போலீஸார் தனிப்படை அமைத்து தஷ்வந்த்தை தேடினர். இந்நிலையில் மும்பையில் நேற்று அவர் கைது செய்யப்பட்டு மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
இதையடுத்து தஷ்வந்த்தை சென்னை அழைத்து செல்ல மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் டிசம்பர் 9-ஆம் தேதிக்குள் தஷ்வந்த்தை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தஷ்வந்த் இன்றிரவு சென்னைக்கு அழைத்து வரப்படுவதாக இருந்தது. ஆனால் அதற்குள் தஷ்வந்த் தப்பிஓடி விட்டார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications