திமுக இளைஞரணி செயலர் பதவிக்கு முட்டி மோதினாரா தயாநிதி? பரபர தகவல்கள்
திமுக இளைஞரணி செயலர் பதவியை தமக்கு தர வேண்டும் என தயாநிதி மாறன் விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் குடும்ப ஆதிக்கம் என்ற விமர்சனத்தை தவிர்க்க ஸ்டாலின் விரும்பியதால் அது நிறைவேறவில்லையாம்.
சென்னை: மு.க.ஸ்டாலின் வசம் இருந்த திமுகவின் இளைஞரணி செயலர் பதவியை தங்களுக்கு தர வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தரப்பும் விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால் திமுகவில் குடும்ப ஆதிக்கம் நீடிக்கிறது என்ற சர்ச்சையே வந்துவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருந்ததால் இது நிறைவேறவில்லை என்கின்றன அண்ணா அறிவாலய வட்டாரங்கள்.
திமுகவின் செயல் தலைவராகிவிட்டார் ஸ்டாலின். கடந்த சில மாதங்களாகவே செயல் தலைவராகிறார் ஸ்டாலின் என பேசப்பட்டு வந்தது.

செயல்தலைவராக ஸ்டாலின் நியமிக்கப்படுவது உறுதியான நிலையில் இளைஞரணி செயலர் பதவியை தங்களுக்கு தர வேண்டும் என தயாநிதி மாறன் தரப்பு விரும்பியதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக கருணாநிதி குடும்பத்தினருடன் தயாநிதி தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி அழுத்தம் கொடுத்தனராம்.
ஆனால் மு.க. ஸ்டாலினோ திட்டவட்டமாக, கடந்த தேர்தலில் நம் மீது வைக்கப்பட்ட விமர்சனமே குடும்ப ஆதிக்கம் கட்சியில் கோலோச்சுகிறது என்பதுதான்.. கூடுமானவரையில் அதை தவிர்க்கத்தான் முயற்சிக்க வேண்டும்.
கட்சிப் பதவிகளில் நம் குடும்பத்தினரே இருந்தால் தொடர்ந்தும் அத்தகைய விமர்சனங்கள் நீடிக்கும். அதிமுகவில் சசிகலா குடும்பத்தினரது ஆதிக்கத்தை விமர்சிக்கும் நிலையில் இருக்கும் நாம் அவர்கள் பதில் தருவதற்கு இடம் தந்துவிடக் கூடாது என்பதுமட்டும்தான் தமது நோக்கம்; வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று தெளிவாக கூறி சமாதானப்படுத்தியிருக்கிறார்.
இதன்பின்னர் கட்சியிலும் எந்த சிறு குழப்பமும் அதிருப்தியும் வந்துவிடக் கூடாது என்பதற்காக முறைப்படி இளைஞரணி இணைச் செயலராக உள்ள முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதனை, புதிய இளைஞரணி செயலராக திமுக நியமித்திருக்கிறதாம்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications