விஜய் டிவியில் இருந்து வெளியேறினார் டிடி?
காபி வித் டிடி, ஜோடி நம்பர் 1 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் டிவியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டு விட்டதாக ஒரு சாரர் கிசுகிசுக்கும் நிலையில், டிடி கர்ப்பமாக இருப்பதாகவும் அதன் காரணமாகவே வேலையை ராஜினாமா செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
12 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வரும் டிடிக்கு எண்ணற்ற ரசிகர்கள் உண்டு. விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாலும், காபி வித் டிடி' இவரது பிரத்யேக நிகழ்ச்சியாகும். இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம்.

விஜய் அவார்ட்ஸ்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி, வளவளவென்று பேசியதால் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும், பார்வையாளர்களும் எரிச்சல் அடைந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருந்தார்.

ராஜினாமா செய்தாரா?
இந்நிலையில், திவ்யதர்ஷினியை விஜய் டிவி நிர்வாகம் நீக்கிவிட்டதாக செய்திகள் வெளியானது. அதேநேரத்தில் நிர்வாகத்தின் முடிவை முன்கூட்டியே தெரிந்து கொண்ட டிடி, அதற்கு முன்னதாகவே ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது.

டிடி கர்ப்பம்?
அதே நேரத்தில் விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், டிடிக்கும் இடையே எந்த மனவருத்தமும் இல்லை என்றும், டிடி கர்ப்பமாக இருப்பதால்தான் அவர் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறியதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தி படிக்கலையே
இந்த தகவல்கள் பற்றி கேட்பதற்காக டிடியை தொடர்பு கொண்டபோது, நான் செய்தியை படிக்கவில்லை என்றும் படித்து விட்டு மாலையில் கூறுவதாகவும் தெரிவித்தார். மாலையில் தொடர்பு கொண்ட போது... நமது தொலைபேசி அழைப்பை அவர் எடுக்கவில்லை. டிடி விளக்கம் சொன்னால் போடுவதற்கு நாம் தயாராகவே இருக்கிறோம்.

கடை திறப்பு விழா
அதே நேரத்தில் டிவி தொகுப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வெடுத்து வரும் டிடி புதிதாக இயற்கை சலூன் திறப்புவிழா, விளம்பர படப்பதிவிலும் பிஸியாகவே பங்கேற்று வருகிறார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications