தொண்டையில் ஓட்டை.. சிகிச்சைக்கு நிதியில்லாமல் தவிக்கும் 5 வயது சிறுமி!
வேலூர்: உடல்நலக்குறைவு காரணமாக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கரூரைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு உங்களால் முடிந்த நிதியுதவியை செய்யுங்கள்.
கரூரைச் சேர்ந்தவர் தாவூத் அலி. கரூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் செல் ரீசார்ஜ் கடையில் வேலை பார்க்கிறார். அவரது மகள் மஹ்முதா பீ(5). அவருக்கு நிமோனியா வந்து பூஞ்சை தொற்று ஏற்பட்டு தொண்டையில் ஓட்டை விழுந்துள்ளது.

தொண்டையில் இருந்து நாசிக்கு செல்லும் குழாய் உள்ளிருந்து அரித்துவிட்டது. முதலில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதியில் இருந்து வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் சிகிச்சைக்கு ஏற்கனவே அவரது பெற்றோர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்துள்ளனர். இந்நிலையில் மேலும் ரூ.2 லட்சம் வரை செலவாகலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
வறுமையில் வாடும் அந்த குடும்பத்தால் சிகிச்சைக்கான பணத்தை அளிக்க முடியவில்லை. இந்நிலையில் தாராள மனம் கொண்டவர்கள் நிதியுதவி செய்து தங்களின் மகளை காப்பாற்றுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

உதவி செய்ய விரும்புவோர் தாவூத் அலியின் வங்கி கணக்கில் பணம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வங்கி கணக்கு விபரம்,
ஏ. தாவூத் அலி
வங்கி கணக்கு எண்: 1227101041768
ஐஎப்எஸ்சி கோடு- CNRB0001227
கனரா வங்கி
கரூர் கிளை
மேலும் விபரம் அறிய விரும்புவோர் தாவூத் அலியை 8883249378 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications