அதிமுகவில் இருந்து விலகிய நடிகர் ஆனந்தராஜூக்கு கொலை மிரட்டல்
மர்மநபர்கள் நடிகர் ஆனந்தராஜூக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
சென்னை: அதிமுகவில் இருந்து விலகிய நடிகர் ஆனந்தராஜுக்கு தொலைபேசி மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகர் ஆனந்தராஜ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் திடீரென அறிவித்தார். மேலும், ஜெயலலிதாவால் மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் எல்லாம் இன்று ஒன்று சேர்ந்து அதிமுகவுக்கு ஒரு தலைமையை காட்டுகின்றனர். அது ஏற்புடையதாக இல்லை.

பொன்னையன், செங்கோட்டையன் பேச்சு வருத்தம் அளிக்கிறது. சசிகலா பொறுப்பேற்க இது தகுதியான நேரமில்லை. ஜெயலலிதா உடன் சசிகலாவை ஒப்பிட்டு பேசக்கூடாது. அதிமுக தொண்டர்களின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று செய்தியாளர்களை சந்தித்தபோது ஆனந்தராஜ் கூறியிருந்தார். அதிமுகவில் சசிகலா முன்னிலைப்படுத்துவதைக் கண்டித்து அதிமுகவில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் ஆனந்தராஜுக்கு தொலை பேசி மூலம் மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆனந்தராஜ் புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications