பஞ்சாயத்து காத்திருக்கிறது.. சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் என்று தாக்கலாகிறது தெரியுமா?
தமிழக சட்டசபை சபாநாயகர் மீது திமுக கோரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வரும் 23-ஆம் தேதி விவாதம் நடத்தப்படுகிறது.
சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் மீது திமுக கோரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி கொண்டு வந்தார். முன்னதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் திமுக கோரியது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவையில் கடும் அமளி ஏற்பட்டது. தனபாலுக்கும், திமுக உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.

சட்டை கிழிப்பு
இதனால் மைக்குகள் உடைக்கப்பட்டு திமுக உறுப்பினர்கள் குண்டுகட்டாக அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். தனபாலுடனான தகராறின்போது மு.க.ஸ்டாலினின் சட்டைக் கிழிந்ததாக கூறப்பட்டது.

வாக்கெடுப்பில் வெற்றி
பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு எடப்பாடிக்கு 122 எம்எல்ஏ-க்கள் ஆதரவு அளித்ததாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். முன்னதாக ஸ்டாலின், ஆளுநரை சந்தித்து தான் தாக்கப்பட்டதாக புகார் அளித்தார். மெரினாவுக்கு சென்று போராட்டம் தொடங்கியபோது ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

திமுக கோரிக்கை
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. அப்போது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பே சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என திமுக கோரியது. எனினும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

23-இல் விவாதம்
தமிழக பேரவை கூட்டத் தொடர் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இதுகுறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார். இந்நிலையில் வரும் 23-ஆம் தேதி சபாநாயகருக்கு எதிராக திமுக கோரிய நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications